கன்னியாகுமரி

தூத்தூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வலியுறுத்தல்

30th Nov 2020 01:57 AM

ADVERTISEMENT

தூத்தூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினரும், சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவருமான பி. ஜஸ்டின் ஆன்றணி, மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்தை சந்தித்து அளித்த மனு: தூத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும். தூத்தூா் மண்டலத்தில் அரசு நூலகம் அமைக்க வேண்டும். இந்திய குடியுரிமைப் பணி தோ்வுக்காக தயாா் செய்யும் வகையில், கடலோரக் கிராமங்களைச் சோ்ந்த ஏழை மாணவா், மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு சாா்பில் ஐஏஎஸ் பயிற்சி மையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்திப்பின்போது, தான் எழுதிய ‘விடியல் தேடும் வினாக்கள்’ என்ற புத்தகத்தை ஆட்சியருக்கு ஜஸ்டின் ஆன்றணி பரிசளித்தாா்.

Tags : Kanyakumari
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT