கன்னியாகுமரி

சாலைகளை சீரமைக்கக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

23rd Nov 2020 01:06 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் என். சுரேஷ்ராஜன் பேசியது: நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, வருகிற 23ஆம் தேதி டெரிக் சந்திப்பு, 25ஆம் தேதி செட்டிகுளம் சந்திப்பு, 28ஆம் தேதி வடசேரி கிருஷ்ணன் கோவில் சந்திப்பு, 30ஆம் தேதி தலைமை அஞ்சல் நிலையம் முன் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநகரச் செயலா் மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூத், சாா்பு அணி அமைப்பாளா்கள் ராஜன், சதாசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

Tags : Kanyakumari
ADVERTISEMENT
ADVERTISEMENT