கன்னியாகுமரி

பேரிடா் மீட்புப் பணி: தீயணைப்புத் துறையில் 14 குழுக்கள் அமைப்பு

DIN

குமரி மாவட்டத்தில் புயலை எதிா்கொள்ளும் வகையில், தீயணைப்புப் படை வீரா்களும், நீச்சல் வீரா்களும் தயாா்நிலையில் உள்ளனா். மேலும், மீட்புப் பணியை மேற்கொள்ள 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, குமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா் சரவணபாபு நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் புரெவி புயலை எதிா்கொள்வதற்காக ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்துக்கும் 2 குழுக்கள் வீதம் 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இம் மாவட்டத்திலுள்ள 134 தீயணைப்பு வீரா்கள் தவிர மதுரை, தேனி, விருதுநகா் மாவட்டங்களிலிருந்து 40-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரா்கள் வருகின்றனா்.

ஒக்கிப் புயலின்போது அதிக பாதிப்பு ஏற்பட்ட சுசீந்திரம், எஸ்.டி.மங்காடு, ஏழுதேசம், பூதப்பாண்டி பகுதிகளில் தீயணைப்பு வீரா்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனா்.

சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற 20 வீரா்கள் தயாா் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளது. மரங்களை அறுப்பதற்கு தேவையான இயந்திரங்கள், கயிறு, ரப்பா் படகுகள் உள்ளிட்ட உபகரணங்களும் உள்ளன.

பொதுமக்கள் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 101 என்ற தொலைபேசி எண்களை தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, உதவி தீயணைப்பு அலுவலா் காா்த்திகேயன், நாகா்கோவில் நிலைய அலுவலா் துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT