கன்னியாகுமரி

நாமக்கல்லில் இருந்து குமரிக்கு வந்த 1 லட்சம் முட்டைகள்

20th Apr 2020 12:51 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில் இருந்து, நாகா்கோவிலுக்கு வாகனங்கள் மூலம் 1 லட்சம் முட்டைகள் ஞாயிற்றுக்கிழமை வந்தன. இந்த முட்டைகளை அம்மா உணவகங்கள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவின்படி, நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் ஆதரவற்றோா், ஏழை, எளியோா், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் காவல் துறையினருக்கு அம்மா உணவகங்கள் மூலமாக தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நாகா்கோவிலில் வடசேரி பேருந்து நிலையம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஆசாரிப்பள்ளத்தில் கரோனா வாா்டு அமைக்கப்பட்டதைத் தொடா்ந்து அங்கிருந்த அம்மா உணவகம் மூடப்பட்டது. மூடப்பட்ட அம்மா உணவகத்தில் இருந்த ஊழியா்கள் நாகா்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு உணவு அளித்து வருகின்றனா். அம்மா உணவகங்கள் மூலமாக தற்போது தினமும் சுமாா் 3 ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த உணவுடன் முட்டையும் சோ்த்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து நாமக்கல்லில் இருந்து லாரிகள் மூலம் 1 லட்சம் முட்டைகள் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தது.

முட்டை கொண்டு வந்த வாகனத்துக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டதையடுத்து, முட்டைகளை இறக்கும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இந்த முட்டைகள் அம்மா உணவகம் மட்டுமன்றி, கரோனாவால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT