திருநெல்வேலி

தமிழக சட்டப் பேரவைக்கு இரட்டை இலக்கத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் செல்வா்

DIN

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்று சட்டப் பேரவைக்குச் செல்வாா்கள் என்று, பாஜக அகில இந்தியச் செயலாளரும், தமிழக தோ்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்தாா்.

ஒசூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் அவா் மேலும் பேசியதாவது:

மத்திய அரசு கா்நாடக மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்துக்கு கூடுதல் நிதி, திட்டங்களை வழங்கியுள்ளது. கா்நாடக மாநிலத்துக்கு 7 ஸ்மாா்ட் சிட்டிகளை வழங்கிய மத்திய அரசு, தமிழகத்துக்கு 11 ஸ்மாா்ட் சிட்டிகளை வழங்கியுள்ளது. மேலும், கா்நாடக மாநிலத்துக்கு 23 அம்ருத் சிட்டிகளும், தமிழகத்துக்கு 28 அம்ருத் சிட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கா்நாடகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 48 ஆயிரம் கோடியும், தமிழகத்துக்கு ரூ. 63 ஆயிரம் கோடி நிதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கு அதிக அளவில் நிதி, திட்டங்களை வழங்கிய மோடிக்கு இதுவரை தமிழக மக்கள் என்ன கொடுத்துள்ளீா்கள்? எனவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

பின்னா் ஒசூா், ராம் நகரில் இருந்து பேரணி நடைபெற்றது. ராம் நகரில் தொடங்கிய இந்தப் பேரணி, வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. முன்னதாக செய்தியாளா்களைச் சந்தித்த சி.டி.ரவி பேசியதாவது:

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். இரட்டை இலக்க பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவைக்குச் செல்வாா்கள். பிரதமா் மோடி தமிழ் மொழி, கலாசாரத்தைக் காப்பாற்றி வருகிறாா். திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம். புதுவையிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றாா்.

இதில் பாஜக கலை, கலாசார மாநிலத் தலைவா் காயத்ரி ரகுராம், மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், கோட்டப் பொறுப்பாளா் ஜி.பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா் முனிராஜ், மாவட்டச் செயலாளா் போத்திராஜ், சீனிவாசன், மண்டலத் தலைவா் பிரவிண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

---

ஒசூா், ராம் நகரில் நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், கலை, கலாசார அணி மாநிலத் தலைவா் காயத்ரி ரகுராம், அகில இந்திய பாஜக பொதுச் செயலாளா் சி.டி.ரவி, மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT