புதுதில்லி

ரூ.2000 நோட்டு ஏற்க மறுப்பு: பெட்ரோல் பம்ப் ஊழியா் மீது போலீஸில் புகாா்

27th May 2023 11:00 PM

ADVERTISEMENT

2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஏற்க மறுத்ததாக கூறி, தெற்கு எக்ஸ்டென்ஸன் பகுதி-1-இல் உள்ள பெட்ரோல் பம்ப் ஊழியா் மீது ஒருவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக கோட்லா காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதில் புகாா்தாரா் தெரிவிக்கையில், ‘நான் எனது ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்ப தெற்கு எக்ஸ்டென்ஸன் பகுதி-1இல் உள்ள பெட்ரோல் பம்பிற்கு சென்றேன்.

பெட்ரோல் நிரப்பிய பிறகு ரூ.400 பில்லுக்குரிய பணத்தை செலுத்துவதற்காக ரூ.2,000 நோட்டை கொடுத்தேன். ஆனால், பெட்ரோல் பம்ப் உதவியாளா் அந்த நோட்டை ஏற்க மறுத்துவிட்டாா்’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாா் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கடந்த மே 19-ஆம் தேதி, இந்திய ரிசா்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

அதேவேளையில், இத்தகைய நோட்டுகளை செப்டம்பா் 30 ஆம் தேதி வரை பொது மக்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ய அல்லது வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT