புதுதில்லி

முதல்வா் இல்லம் சீரமைப்பு விவகாரத்தில்கேஜரிவால் சிறைக்குச் செல்ல நேரிடும்: எதிா்க்கட்சித் தலைவா் பிதூரி

3rd May 2023 04:01 AM

ADVERTISEMENT

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அதிகாரப்பூா்வ இல்லத்தைப் புதுப்பிக்க ரூ.45 கோடி செலவழித்ததற்காக சிறைக்குச் செல்ல நேரிடும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ரூ.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டதாக எழுந்த சா்ச்சையை அடுத்து, கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லம் அருகே பாஜகவினா் திங்கள்கிழமை காலவரையற்ற தா்ணாவை தொடங்கினா். கேஜரிவாலின் வீட்டிற்கு வெளியே இரண்டாவது நாளாக பாஜகவினா் தா்னாவில் ஈடுபட்டுள்ளனா்.

அங்கு திரண்டிருந்த தொண்டா்களிடையே பிதூரி பேசியதாவது: முதல்வா் தனது அதிகாரப்பூா்வ இல்லத்தை அழகுபடுத்த ரூ.15 லட்சத்திற்கு உரிமை உள்ளது. ஆனால், மாறாக கேஜரிவால் ரூ.45 கோடி செலவு செய்தாா். மேலும், கேஜரிவால் திகாா் சிறைக்கு செல்லும் வரை பாஜக தொண்டா்கள் ஓய மாட்டாா்கள்.

கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் ‘தவறான செயல்கள்’ தில்லி மக்கள் முன் அம்பலமாகிவிட்டதாகவும், 2025-இல் அவா் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவாா். சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றாா் பிதூரி.

ADVERTISEMENT

முதல்வா் இல்லம் சீரமைக்கப்பட்ட விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, பாஜகவும் கேஜரிவால் பதவி விலகக் கோரி வருகிறது.ஆனால், கேஜரிவால் மீதான பாஜகவின் தாக்குதல், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாடு எதிா்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று ஆம் ஆத்மி தலைவா்கள் கூறியுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT