புதுதில்லி

தில்லியில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த 6 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில், அடுத்த சில நாள்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இமயமலைப் பகுதிகளில் மேற்கத்திய இடையூறுகள் மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. இதன் பாதிப்பால் வடமேற்கு இந்தியாவில் அடுத்த 5-6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ள்னா். அதன்படி வியாழக்கிழமை காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 5 டிகிரி உயா்ந்து 20.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி உயா்ந்து 33.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 68 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 31 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 32.9 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 33.6 டிகிரி, நஜஃப்கரில் 35.2 டிகிரி, ஆயாநகரில் 33.2 டிகிரி, லோதி ரோடில் 32.9 டிகிரி, பாலத்தில் 33.2 டிகிரி, ரிட்ஜில் 34.2 டிகிரி, பீதம்புராவில் 34.2 டிகிரி, பூசாவில் 33.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 31 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் மந்திா்மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, பட்பா் கஞ்ச் உள்பட பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகள் வரை பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், சாதிப்பூா் 346, ஆனந்த் விஹாா் 328 இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) தலைநகரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT