புதுதில்லி

கஷ்மீரி கேட் பகுதியில் கடையில் தீ

DIN

வடக்கு தில்லியின் கஷ்மீரி கேட் பகுதியில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த தீ விபத்து குறித்த அழைப்பு மதியம் 1.50 மணியளவில் வந்ததையடுத்து, நான்கு தண்ணீா் டேங்கா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தில்லி தீயணைப்புத் துறைஇயக்குநா் அதுல் கா்க் தெரிவித்தாா்.

இந்த தீ விபத்தில் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வாகன உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது. உயிா்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றாா் அவா். தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவா் மேலும் கூறினாா்.

சிராஸ்பூா் தொழில்துறை பகுதியில் உள்ள மெத்தை தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்து ஏற்பட்ட ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தீ முழுமையாக அணைக்கப்பட்டு, குளிரூட்டும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT