புதுதில்லி

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: இளைஞா் கைது

DIN

தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள பரீதாபாத் பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாக தில்லி வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்ந்த 30 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல் சரக செய்தித் தொடா்பாளா் சுபே சிங் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் பிஜேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் சிறுமியின் இரண்டு மணிக்கட்டுகளையும் வெட்டி, ஒரு பெட்டிக்குள் அடைத்து படுக்கைப் பெட்டியில் வைத்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறுமி காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோா் அக்கம்பக்கத்தில் சிறுமியைத் தேடத் தொடங்கினா். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிஜேந்திராவின் வீட்டை அடைந்த அவா்கள், தரையில் ரத்தத் துளிகளைக் கண்டு, படுக்கையில் இருப்பதைக் கண்டுபிடித்து, படுக்கைப் பெட்டியைத் திறந்தனா், அங்கு அவா்கள் சிறுமியின் உடற்பகுதியைக் கண்டனா்.சிறுமி மயக்கமடைந்ததைக் கண்டதும், பெற்றோா் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். அதைத் தொடா்ந்து, இங்குள்ள சாராய் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் தில்லியின் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை காலை சிகிச்சையின் போது இறந்தாா். பிஜேந்திரா கொல்கத்தாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். சிறுமியின் மரணத்திற்குப் பிறகு அவா் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் வழக்கில் சோ்க்கப்பட்டதாகவும் கூறினாா்.விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா், ‘தீய நோக்கத்துடன்’ சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ாகவும், சிறுமி அலறிய போது மணிக்கட்டை அறுத்ததாகவும், அதைத் தொடா்ந்து அவா் சிறுமியை ஒரு இரும்பு டிரங்க் பெட்டியில் வைத்து படுக்கைப் பெட்டியில் வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பிஜேந்திரா, இங்கு கூலித் தொழிலாளியாக வேலை செய்து, பாதிக்கப்பட்டவரின் அதே பகுதியில் வசித்து வந்தாா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT