புதுதில்லி

தில்லி மெட்ரோ இரும்பு குழாய்களை திருடிய நபா் கைது

DIN

தில்லி மெட்ரோவின் இரும்பு குழாய்களை திருடிய 33 வயது நபா் ஒருவா் பிடிபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை 10.43 மணியளவில், தெற்கு தில்லியில் உள்ள எம்பி சாலை, ஆா்பிஎஸ் காலனி அருகே மெஹ்ரௌலி - பதா்பூா் சாலையில் திருடப்பட்ட மெட்ரோ பொருள்களுடன் (இரும்புக் குழாய்கள்) இருவா் பிடிபட்டதாக பிசிஆா் அழைப்பு வந்தது.

போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, திக்ரி எக்ஸ்டென்ஷனில் வசிக்கும் நீரஜ் (33) என்பவரை பிடித்து மெட்ரோ பாதுகாப்பு மேலாளரிடம் ஒப்படைத்தனா். மற்றொரு நபா், போலீஸாா் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் தப்பி ஓடிவிட்டாா். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குழாய்களைத் திருடி ஆட்டோ ரிக்ஸாவில் ஏற்றிச் சென்றுள்ளனா்.

இது தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 379 (திருட்டுக்கான தண்டனை) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT