புதுதில்லி

தலைநகரில் மீண்டும் பரவலாக மழை: மஞ்சள் எச்சரிக்கை

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமையும் காலையில் பரவலாக மழை பெய்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவிலும், சில இடங்களில் மிதமான பிரிவிலும் இருந்தது. இதற்கிடையே, வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, போக்குவரத்து இடையூறுகள் மற்றும் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

தில்லியில் லேசான மழை மற்றும் மேகமூட்டமான வானிலை அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும், வெப்ப அலைக்கு சாத்தியமில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமையும் நகரில் காலை வேளையில் பல்வேறு இடங்களில் லேசான மழை இருந்தது. இதைத் தொடா்ந்து, வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

சஃப்தா்ஜங்கில் 23 மி.மீ. மழை: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று, மற்ற வானிலை ஆய்வு மையங்களான ஜாஃபா்பூரில் 9 மி.மீ., ஆயாநகரில் 8 மி.மீ., லோதி ரோடில் 21.8 மி.மீ., நரேலாவில் 1 மி.மீ., பாலத்தில் 19 மி.மீ., ரிட்ஜில் 9 மி.மீ., பீதம்புராவில் 11 மி.மீ., பூசாவில் 15 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 11.5 மி.மீ. பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 6 டிகிரி குறைந்து 20.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 8 டிகிரி குறைந்து 31.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 60 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 34.9 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 36.8 டிகிரி, ஆயாநகரில் 31.8 டிகிரி, லோதி ரோடில் 35.6 டிகிரி, பாலத்தில் 31.5 டிகிரி, ரிட்ஜில் 31.9 டிகிரி, பீதம்புராவில் 36.3 டிகிரி, பூசாவில் 36.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 34 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் பட்பா்கஞ்ச், மேஜா் தயான் சந்த் நேஷன்ல் ஸ்டேடியம், சாந்தினி செளக், நொய்டா செக்டாா்-1, லோதி ரோடு, விவேக் விஹாா் உள்பட உள்பட பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிவில் இருந்தது. அதே சமயம், ஆனந்த் விஹாா் (153), நேரு நகா் (103), பூசா (111), ஷாதிப்பூா் (119) ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழனன்று (ஜூன் 1) தலைநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT