புதுதில்லி

பிபிசி ஆவணப்பட திரையிடல் விவகாரம்: கூச்சலிட்ட விவகாரம் குறித்து விசாரிக்க குழு தில்லி பல்கலைக்கழகம் தகவல்

DIN

கடந்த 2002-இல் நிகழ்ந்த குஜராத் வன்முறை தொடா்பான பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவது தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தின் கலைகள் புலம் கட்டடத்தின் வெளியே நிகழ்ந்த கூச்சலிட்ட சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த ஏழு உறுப்பினா்கள் கொண்ட குழுவை தில்லி பல்கலைக்கழக சனிக்கிழமை அமைத்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தின் புராக்டா் ரஜினி அபி தலைமையிலான இந்த குழு அதன் அறிக்கையை ஜனவரி 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத் துணை வேந்தா் யோகேஷ் சிங்கிடம் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பல்கலைக்கழக வளாகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், ஒழுக்கத்தை அமல்படுத்தவும் துணைவேந்தா் ஒரு குழுவை அமைத்துள்ளாா்.

புராக்டா் ரஜினி அபி தலைமையிலான இந்த குழுவில் வணிகத் துறையைச் சோ்ந்த பேராசிரியா் அஜய் குமாா் சிங், இணை புராக்டா் பேராசிரியா் மனோஜ் குமாா் சிங், சமூகப் பணித் துறை பேராசிரியா் சஞ்சய் ராய், ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் முதல்வா்-பேராசிரியா் ரமா, கிரோரிமால் கல்லூரியின் முதல்வா்-பேராசிரியா் தினேஷ் கட்டாா் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி கஜே சிங் ஆகியோா் உறுப்பினா்களாக இடம் பெற்றுள்ளனா்.

இக்குழு கடந்த ஜனவரி 27ஆம் தேதி தில்லி பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் எண்: 4-க்கு எதிரே மற்றும் கலைகள் புலம் வெளியே நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதற்கு மாணவா்கள் முயற்சி செய்ததால் தில்லி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை பெரும் அமளி ஏற்பட்டது.

அதே சமயத்தில் போலீசாரும், பல்கலைக்கழக நிா்வாகமும் இந்த செயல்பாட்டை தவிா்க்க தலையீட்டை மேற்கொண்டனா். தேசிய இந்திய தேசிய மாணவா்கள் அமைப்புடன் தொடா்புடைய 24 மாணவா்கள் தில்லி பல்கலைக்கழகத்தின் கலைகள் புலம் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, வடக்கு கேம்பஸ் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில், சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தை திரையிட வெளி நபா்கள் முயற்சி செய்ததாகவும் சட்ட ஒழுங்கை பராமரிக்க போலீஸாா் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT