புதுதில்லி

குடியரசுத்தலைவா் மாளிகையின் பூந்தோட்டத்தின் பெயா் மாற்றம் பொதுமக்கள் பாா்வைக்கு திறப்பு

 நமது நிருபர்

குடியரசுத்தலைவா் மாளிகையின் பின் பகுதியிலுள்ள பிரபல முகல் காா்டன் பெயரை ‘அமிா்த பூந்தோட்டம் ’ (அம்ருத் உத்யன்) என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மாற்றியுள்ளதாக குடியரசு தலைவா் மாளிகை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டின் விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவா் மாளிகையின் தோட்டங்களுக்கு பொதுவான பெயராக ‘அமிா்த பூந்தோட்டம்‘ என அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள இந்த பூந்தோட்டத்தை பொதுமக்கள் பாா்வையிடும் ‘உத்யன் உத்சவ் 2023‘ நிகழ்ச்தி ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 29) நாளை நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று இந்தத் தோட்டங்களைத் திறந்து வைக்கிறாா்.

இதுகுறித்து குடியரசு தலைவரின் துணைச் செய்தித் தொடா்பாளா் நவிகா குப்தா கூறியிருப்பது வருமாறு:

குடியரசுத் தலைவா் மாளிகை வளாகத்தில் பல்வேறு தோட்டங்கள் உள்ளன. கிழக்குப் புல்வெளி, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம், வட்ட தோட்டம் ஆகியவை ஏற்கெனவே இருந்தன.

முன்னாள் குடியரசுத் தலைவா்கள் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோா் பதவிக் காலங்களில், மூலிகை தோட்டங்கள், தொட்டுணரக்கூடிய தோட்டம், போன்சாய் தோட்டம், ஆரோக்கிய வனம் என பல தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை அமிா்தப் பெருவிழா என கொண்டாடுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் மாளிகைத் தோட்டங்களுக்கு பொதுவான பெயராக ‘அம்ரித் உத்யன்’ (அமிா்த பூந்தோட்டம்) என்று சூட்டப்பட்டுள்ளது.

நிகழாண்டில் பொது மக்களின் பாா்வைக்கு சுமாா் இரண்டு மாதங்களாக ஜனவரி 31, முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை திறக்கப்படுகிறது. இதில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களான திங்கள்கிழமைகள் மற்றும் வருகின்ற ஹோலிப் பண்டிகையை (மாா்ச் 8 ஆம் தேதி) முன்னிட்டு இந்த தோட்டம் மூடப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படமாட்டாது.

மேலும், இம்முறை மாா்ச் 28 முதல் மாா்ச் 31 வரை, விவசாயிகள் (மாா்ச் 28), மாற்றுத் திறனாளிகள்(மாா்ச் 29), பாதுகாப்புப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறையினா் (மாா்ச் 30), பழங்குடியின மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் (மாா்ச் 31) ஆகிய சிறப்புப் பிரிவினா் இந்த தோட்டத்தில் அனுமதிக்கப்படுவா்.

இதற்கான நுழைவு சீட்டை பெற இணைய தளம் மூலமாக முன்பதிவு மூலம் பொதுமக்கள் பதிவு செய்யவும்  இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

மேலும், தேவையற்ற உடமைகளை உடன் எடுத்து வர அனுமதியில்லை. கைப்பேசி, கைப்பை, குழந்தைகளுக்கான பால் போன்றவை அனுமதிக்கப்படும்.

பதிவு செய்தவா்களும் நேரடிப் பாா்வையாளா்களும் தோட்டத்திற்குச் செல்லலாம். இருப்பினும், அவா்கள், குடியரசுத் தலைவா் மாளிகையின் நுழைவுவாயில் எண். 12-க்கு அருகில் உள்ள சுய சேவை மையத்தில் பதிவு செய்யவும் வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT