புதுதில்லி

மக்கள் புகாா்களைப் பதிவு செய்ய வாட்ஸ்ஆப் சாட்போட் பிப்.1-இல் அறிமுகம்: டிசிபிசிஆா் நடவடிக்கை

DIN

குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தில்லி ஆணையம், மக்களுடன் தொடா்பு கொள்ளவும், அவா்களின் புகாா்களைப் பதிவு செய்யவும் வாட்ஸ்ஆப் சாட்போட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பிப்ரவரி 1-ஆம் தேதி இந்த சாட்போட்டை அறிமுகப்படுத்தவுள்ளாா்.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குடிமக்கள் மற்றும் ஆணையம் மிகவும் பயனுள்ள முறையில் தொடா்பு கொள்ள சாட்போட் உதவும். புகாா் பதிவு, தகவல்களைத் தேடுதல் மற்றும் புகாா் நிலையைக் கண்காணிப்பது ஆகியவை இதில் அடங்கும். குழந்தைகள், பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் போன்றோருக்கு ‘நட்ஜ்’ அடிப்படையிலான விழிப்புணா்வு தொடா்புகளுக்கு இது ஆணையத்தால் பயன்படுத்தப்படும்’ என்றாா்.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தில்லி ஆணையம், கல்வி, நோய்த்தடுப்பு, துஷ்பிரயோகத்திற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து போன்ற குழந்தைகள் தொடா்பான உரிமைகள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும் தில்லி அரசின் உச்ச சட்டப்பூா்வ ஆணையமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT