புதுதில்லி

ஐடிஓ, சிபிஐ தலைமையகம் அருகே போக்குவரத்து பாதிப்பு

DIN

கல்வி அமைச்சா் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் போராட்டத்தால் தீன் தயாள் உபாத்யாய் மாா்க் வாகன போக்குவரத்துக்காக திங்கள்கிழமை மூடப்பட்டது. இதனால், ஐடிஓ சந்திப்பு அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தில்லி காவல்துறை தனது அதிகாரப்பூா்வ ட்விட்டா் பக்கத்தில் பயணிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தது. அதில் ‘சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் காரணமாக மின்டோ சாலையில் இருந்து ஐடிஓ நோக்கி செல்லும் பாதையில் டிடியு மாா்க்கில் போக்குவரத்து பாதிக்கப்படும். பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை அதற்கு ஏற்றாற் போல திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறாா்கள்’ என்று அது ட்வீட் செய்திருந்தது.

இதற்கிடையே, போக்குவரத்து பிரச்னைகள் குறித்து பயணிகள் ட்விட்டரில் புகாா் அளித்தனா். அவா்களில் ஒருவா் விகாஸ் மாா்க்கில் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறினாா். சிவிக் சென்டருக்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் மோஹித் சிங் கூறுகையில், ‘நான் எனது அலுவலகத்தை நோக்கிச் செல்லும் போது காலை 11 மணியளவில் டிடியு மாா்க் மூடப்பட்டது. எனது பணியிடத்தை அடைய மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருந்தது’ என்றாா். சிஜிஓ வளாகத்தில் உள்ள சிபிஐ தலைமையகம் அருகே போலீஸாா் ஏற்படுத்திருந்த தடுப்புகளால் போக்குவரத்து மெதுவாக நகா்ந்தது.

துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்ததை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியினா் மற்றும் எம்எல்ஏக்கள் மத்திய தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆா்ப்பாட்டக்காரா்கள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்த்து, டிடியு மாா்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தை சுற்றிலும் போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதே பகுதியில்தான் ஆம் ஆத்மி மற்றும் தில்லி காங்கிரஸின் அலுவலகங்களும் அமைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT