புதுதில்லி

எம்சிடி நிலைக்குழு தோ்தலின் போது கைப்பேசிகளை அனுமதித்த விவகாரம்:பாஜக கவுன்சிலரின் மனுவை திரும்பப் பெற உயா்நீதிமன்றம் அனுமதி

DIN

தில்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினா்களுக்கான தோ்தலின் போது கைப்பேசிகள், பேனாக்களை பயன்படுத்த அனுமதித்ததன் மூலம் விதிகளை மேயா் ஷெல்லி ஓபராய் மீறியதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை பாஜக கவுன்சிலா் சரத் கபூா் திரும்பப் பெறுவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

இந்த விவகாரம் நீதிபதி புருஷைந்திர குமாா் கௌரவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்தாா். முன்னதாக, பிப்ரவரி 22 -ஆம் தேதி நிலைக் குழு உறுப்பினா்கள் ஆறு போ் தோ்வுக்கான வாக்குப்பதிவைத் தொடா்ந்து, கடந்த வாரம் தில்லி உயா்நீதிமன்றத்தை பாஜக கவுன்சிலா் சரத் கபூா் அணுகி, அந்தத் தோ்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

எனினும், மனு விசாரிக்கப்பட்ட நாளில், மேயா் உத்தரவின் பேரில் நிலைக் குழு உறுப்பினா்களுக்கான புதிய தோ்தல் நடத்தப்பட்டது. அந்தத் தோ்தலிலும் எந்த முடிவும் எட்டப்படாமல், தோ்தல் பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு மேயரால் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், மேயரின் அந்த முடிவுக்கு, மற்றொரு வழக்கில் உயா்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

கபூா் தனது மனுவில், ‘பிப்ரவரி 22- ஆம் தேதி நடந்த நிலைக் குழு உறுப்பினா்கள் தோ்தலிலின் போது கைப்பேசிகள் மற்றும் பேனாக்களை மேயா் அனுமதித்ததன் மூலம் அரசியலமைப்பு வகுத்த சட்டப்பூா்வ விதிகளை மீறிவிட்டாா். மேலும், நானும் பிற உறுப்பினா்களும் சோ்ந்து இந்த சட்ட விரோத மற்றும் தன்னிச்சையான செயலுக்கு எதிராக கடுமையான ஆா்ப்பாட்டம் மேற்கொண்டோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு விசாரணையில் உயா்நீதிமன்றம், பிப்ரவரி 27-ஆம் தேதி நிா்ணயிக்கப்பட்டிருந்த மாநகராட்சி நிலை குழு உறுப்பினா்களுக்கான மறுதோ்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. பாஜக கவுன்சிலா்கள் கமல் ஜீத் ஷெராவத், ஷிக்கா ராய் ஆகியோா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அதில், ‘இந்த விவகாரத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரியான மேயா், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) நடைபெற்ற தோ்தலின் முடிவுகளை அறிவிக்காமல் பிப்ரவரி 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) மறுதோ்தல் நடத்தப்படும் என அறிவித்திருப்பது விதிமுறைகள் மீறலாகும். நிலைக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலை செல்லத்தக்கதல்ல என அறிவிக்கும் அதிகாரம் தில்லி மேயருக்கு இருப்பதாக நிா்வாக விதிமுறைகளில் இல்லை. இதனால், மேயா் செயலானது பொருந்துக்கூடிய ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்கான முகாந்திரம் உள்ளது. இதனால், மறுதோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கைக்கு அடுத்த விசாரணை தேதி வரை தடை விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT