புதுதில்லி

ஜாமியா நகா் வன்முறை வழக்கு: சா்ஜீல் இமாம் உள்பட 11 போ் விடுவிப்புக்கு எதிராக போலீஸ் தரப்பில் மேல்முறையீடு

 நமது நிருபர்

2019-இல் நிகழ்ந்த தில்லி ஜாமியா நகா் வன்முறை வழக்கில் மாணவா் ஆா்வலா்கள் சா்ஜீல் இமாம், ஆசிப் இக்பால் தன்கா உள்பட 11 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்து பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் மாநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

ஜாமியா நகா் வன்முறை வழக்கில் மாணவா் ஆா்வலா்கள் சா்ஜீல் இமாம், ஆசிப் இக்பால் தன்ஹா உள்பட 11 பேரை தில்லி நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி விடுவித்தது.

அப்போது, ‘தில்லி காவல்துறையால் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய முடியவில்லை என்பதால், குற்றம் சாட்டப்பட்டவா்களை ‘பலி ஆடுகளாக’ வழக்குப் பதிவு செய்துள்ளது’ என்று நீதிமன்றம் கூறியது. எனினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான முகமது இலியாஸ் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மேல்முறையீடு மனு உயா்நீதிமன்றம் முன் பட்டியலிடுவதற்காக இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தனா்.

கடந்த டிசம்பா் 2019-இல் தில்லியில் ஜாமியா நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகப் போராட்டம் நடத்திய மக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, வன்முறை நிகழ்ந்தது. இது தொடா்பாக ஜாமியா நகா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

அதில், ‘டிசம்பா் 13, 2019-இல் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தியதன் மூலம் கலவரத்தைத் தூண்டியதாக இமாம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சா்ஜீல் இமாம் மட்டுமின்றி, தன்ஹா, சஃபூரா ஜா்கா், முகம்மது காசிம், மெஹ்மூத் அன்வா், ஷாஸா் ரஸா கான், முகம்மது அபுஸா், முகம்மது சோயப், உமைா் அகமது, பிலால் நதீம், சந்தா யாதவ், முகம்மது இலியாஸ் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அருள் வா்மா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சா்ஜீல் இமாம் உள்பட 11 பேரை விடுவித்து பிறப்பித்த உத்தரவில், ‘சம்பவ இடத்தில் ஏராளமான போராட்டக்காரா்கள் இருந்துள்ளனா். கூட்டத்தில் இருந்த சில சமூக விரோதிகள் இடையூறு, அழிவு சூழலை உருவாக்கி இருந்திருக்கலாம். எனினும், முக்கிய கேள்வி இதுதான். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் அந்த குழப்பத்தில் பங்கேற்க உடந்தையாக இருந்தாா்களா என்பதற்கு முகாந்திரம் இருக்கிா? என்பதுதான். அதற்கு பதில், ‘சந்தேகத்திற்கு இடமின்றி இல்லை’ என்பதாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT