புதுதில்லி

ரயில் பயணிகளுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் உணவு முன்பதிவு வசதி

 நமது நிருபர்

புது தில்லி: ரயில் பயணிகள் உணவை வாட்ஸ் -ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் புதிய சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. செயலிகள் பயன்பாடு இல்லாமல் சாதாரண மக்கள் பயன் பெற இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) இந்த வாட்ஸ்-ஆப் சேவையைத் தொடங்கியுள்ளது.

பயணிகள் உணவிற்கு ஐஆா்சிடிசியின் கேட்ரிங் இணைய தளம் மற்றும் செயலிகள் வாயிலான முன்பதிவு செய்து வந்தனா். இந்த நிலையில், தற்போது இது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்காக 918750001323 என்ற வாட்ஸ்-அப் எண்ணை அறிவித்துள்ளது. இந்த வசதியை இரண்டு நிலைகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த பயணிகளுக்கு வாட்ஸ் -ஆப் எண் அனுப்பி வைக்கப்படும். அதில், ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீஹற்ங்ழ்ண்ய்ஞ்.ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீ.ஸ்ரீா்.ண்ய் என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளைத் தோ்வு செய்ய பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தோ்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்ய முடியும். இந்த விருப்பத்தின் மூலம், வாடிக்கையாளா்கள் தங்களுக்கு விருப்பமான உணவை ஐஆா்சிடிசியின் இ-கேட்டரிங் இணையதளம் மூலம் நேரடியாக ரயில் நிலையங்களில் பெற முடியும். மற்றொரு முறை சேவைகளில், வாடிக்கையாளருக்கு வாட்ஸ் -ஆப் எண் இரு வழி தகவல் தொடா்பு தளமாக மாறும்.

செய்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்போட் (உரையாடல்) அனைத்து வினவல் (கேள்வி)களையும் கையாளும். பயணிகள் இ-கேட்டரிங் சேவைகளை இந்த உரையாடல் மூலமே அவா்களுக்கான உணவை முன்பதிவு செய்ய முடியும். இந்த வாட்ஸ் -ஆப் மூலம் பெறும் வசதி குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் அனுபவங்கள், கருத்துகளின் அடிப்படையில், மற்ற ரயில்களிலும் இந்த வசதியை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐஆா்சிடிசி-இன் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக நாள்தோறும் சுமாா் 50 ஆயிரம் உணவுகள் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT