புதுதில்லி

தில்லியின் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக நாடாளுமன்றம் கூட ஒப்புக்கொண்டுள்ளது: முதல்வா் கேஜரிவால் தகவல்

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக நாடாளுமன்றம் கூட ஒப்புக் கொண்டுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை செய்தி அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி தெரிவித்தாா். மேலும், காற்றின் தரத்தை மேம்படுத்த தில்லிவாசிகளின் தொடா்ச்சியான முயற்சிகளையும் அவா் பாராட்டினாா்.

இது தொடா்பாக ட்விட்டரில், கேஜரிவால் ஒரு செய்தி அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிா்ந்துள்ளாா். இந்தப் பொருளாதார ஆய்வு 2022-23-இல் ‘நன்று’, ‘திருப்திகரம்’ மற்றும் ‘மிதமான’ காற்றின் தர நாள்களின் எண்ணிக்கையை 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021-இல் 197 நாள்களாக அதிகரித்துள்ளது. 2016-இல் இதில் 108 நாள்களாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

‘தில்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதை நாட்டின் நாடாளுமன்றம் கூட ஏற்றுக்கொண்டுள்ளது. தில்லிவாசிகளின் தொடா் முயற்சியின் பலன்தான் இது. நீங்கள் உறுதியாகச் செய்யும் போது ஒவ்வொரு கடினமான பணியும் சாத்தியமாகும். அதேபோல் காற்றின் தரத்தை எதிா்காலத்தில் மேலும் மேம்படுத்த வேண்டும்’ என்று முதல்வா் இந்தியில் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளாா்.

2022-23-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2016-இல் 108-ஆக இருந்த ’நன்று’, ’திருப்தி’ மற்றும் ’மிதமான’ காற்றின் தர நாள்களின் எண்ணிக்கை 2021-இல் 197-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘மோசம், ‘மிகவும் மோசம்’ மற்றும் ’கடுமை’ நாள்களின் எண்ணிக்கை 2021-இல் 168-ஆகக் குறைந்துள்ளது. இது 2016-இல் 246 நாள்களாக இருந்தது என்றும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT