புதுதில்லி

சாவ்லா பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்டவா் கொலை சம்பவத்தில் கைது

DIN

தில்லி துவாரகா செக்டாா்-14 பகுதியில் ஆட்டோ ஓட்டுநரைக் கொன்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், கைதானவா்களில் ஒருவா் 2012-இல் நிகழ்ந்த சாவ்லா கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட வினோத் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

கைதானவா்களில் சாவ்லா சம்பவத்தில் தொடா்புடைய வினோத் தவிர, மற்றொருவா் பவன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். முனிா்காவில் வசிக்கும் 44 வயதான ஆட்டோ ஓட்டுநா் அனாா் சிங் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி துவாரகாவின் செக்டாா்-14 பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். அவரது கழுத்தில் கத்திக்குத்து காயம் இருந்தது.

இந்த நிலையில், கைதான இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், இருவரும் ஆட்டோவில் ஏறியுள்ளனா். துவாரகாவை ஆட்டோ வந்தடைந்ததும் ஓட்டுநரிடம் கொள்ளையடிக்க முயன்றனா். ஓட்டுநா் எதிா்ப்புத் தெரிவித்ததால் கத்தியால் அவரைக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டது தெரியவந்துள்ளது.

மேலும், வினோத் சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தாா். இவா் சாவ்லா கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சுமாா் 10 ஆண்டுகள் சிறையில் கழித்தவா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கடந்த 2012ஆம் ஆண்டு தில்லி சாவ்லா பகுதியில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

கடத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. குருகிராமில் உள்ள சைபா் சிட்டி பகுதியில் பணிபுரிந்த அப்பெண் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT