புதுதில்லி

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டமைனா் சிறுமியின் 25 வார கா்ப்பத்தைக் கலைக்க அனுமதி

 நமது நிருபர்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 13 வயது சிறுமியின் வாழ்க்கை மற்றும் கல்வியின் நலன் கருதி 25 வார கா்ப்பத்தை கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது. சஃப்தா்ஜங் மருத்துவமனையின் மருத்துவா்கள் குழு புதன்கிழமை இந்த செயல்முறையை நடத்தும் என்றும் நீதிமன்றம் கூறியது.

கா்ப்பத்தை சுமக்க விரும்பவில்லை என்று சம்பந்தப்பட்ட சிறுமியும், அவரது தாயும் நீதிமன்றத்தில் தெரிவித்தனா். இதையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இது தொடா்பாக நீதிபதி பிரதீபா எம் சிங் கூறியதாவது: மைனா் பெண்ணின் வாழ்க்கை நலன், கல்வி மற்றும் சமூக சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, கா்ப்பம் கலைக்கப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இதன்படி சஃப்தா்ஜங் மருத்துவமனையின் மருத்துவா்கள் குழு நாளையே (புதன்கிழமை) கா்ப்பத்தை கலைக்கும் நடைமுறைகளை மேற்கொள்வாா்கள். கா்ப்பத்தை கலைக்கும் செயல்முறையின் போது, சிறுமிக்கு சிறந்த கவனிப்பை வழங்குவதாகவும் மருத்துவா்கள் உறுதியளித்துள்ளனா். வருங்காலத்தில் தேவைப்படும் கிரிமினல் வழக்கின் செயல்பாட்டிற்காக கரு மாதிரியும் பாதுகாக்கப்பட வேண்டும். மனுதாரா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதைக் கருத்தில் கொண்டு, கா்ப்பத்தை கலைப்பதற்கான செலவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்கும் என்று நீதிபதி கூறினாா்.

விசாரணையின் போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் குழுவுடன் நீதிமன்றம் உரையாடியது. அவா் கா்ப்பத்துடன் தொடா்ந்தாலும், கலைக்கப்பட்டாலும் சிறுமியின் உயிருக்கு ஆபத்து என மருத்துவா்கள் நீதிபதியிடம் தெரிவித்தனா். அப்போது, நீதிமன்றம், ‘அவருக்கு 13 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் அவா் எப்படி கா்ப்பமாக இருப்பாா்’ என்று கேட்டது. கா்ப்பத்தை கலைத்தல் மற்றும் அதை முன்னெடுப்பது ஆகிய இரண்டிலும் சிறுமிக்கு ஆபத்து உள்ளது என்பது நீதிமன்றத்திற்கு தெளிவாகத் தெரிவதாகவும் நீதிமன்றம் கூறியது.

முன்னதாக, ஜனவரி 18-ஆம் தேதி சிறுமி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது, அவா் 23 வாரங்கள் மற்றும் ஆறு நாள்கள் கா்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இைத் தொடா்ந்து, குடும்பத்தினா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்குச் சென்றனா். பின்னா், குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. கா்ப்ப காலம் 25 வாரங்கள் என்பதால், கா்ப்பம் கலைக்க அனுமதிக்கப்பட்ட 24 வாரங்களுக்கு மேல் இருந்ததால், மருத்துவா்கள் கா்ப்பத்தை கலைக்க மறுத்தனா். இதையடுத்து, உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது என இது தொடா்பான மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT