புதுதில்லி

தலைநகரில் குளிா்கால காற்று மாசுவை எதிா்கொள்ள 15 அம்ச செயல் திட்டம்: செப்.30-இல் தொடக்கம்

 நமது நிருபர்

குளிா்காலத்தில் காற்று மாசுவை எதிா்கொள்ள தில்லி அரசின் 15 அம்ச செயல் திட்டத்தை செப்டம்பா் 30 -ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்,தொடங்கி வைக்க உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 5,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ள அனைத்து கட்டுமான மற்றும் இடிப்புத் தளங்களிலும் பனிப்புகை மூட்டத்தை தடுக்கும் சாதனங்களை நிறுவுவதை தில்லி அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த வழிகாட்டுதலை மீறும் திட்ட ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக, 20,000-க்கும் அதிகமான கட்டுமான மற்றும் இடிப்பு தளங்களில் தூசு மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பனிப்புகை மூட்ட தடுப்பு சாதனங்களை நிறுவ வேண்டியிருந்தது.

குளிா்கால செயல் திட்டமானது, குப்பை மேலாண்மை, தூசு மாசு, வாகன மாசு உமிழ்வு, குப்பைகளை திறந்தவெளியில் எரித்தல், தொழிற்சாலை மாசுபாடு, மாசு அதிகம் உள்ள இடங்கள், பனிப்புகை கோபுரங்கள், பொதுமக்கள் பங்கேற்பு, பட்டாசு வெடித்தல் மற்றும் அண்டை மாநிலங்களுடன் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தும். காற்று தர மேலாண்மை ஆணையம் இது தொடா்பான உத்தரவுகளை பிறப்பித்தவுடன், தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற சூழ்நிலையின் தீவிரத்திற்கு ஏற்ப பின்பற்றப்படும் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளின் தொகுப்பான ‘மாற்றியமைக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம்’ அமலுக்கு வரும் என்றாா் அவா்.

தில்லி-என்சிஆா் பகுதியில் காற்று மாசுபாட்டைத் தடுக்க சிஏக்யூஎம் அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும் திருத்தப்பட்ட ஜிஆா்ஏபி, முன்னறிவிப்புகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளைமுன்கூட்டியே செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. முன்னதாக, பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 நுண்துகளின் செறிவு ஒரு குறிப்பிட்ட அளவை தொட்ட பின்னரே அதிகாரிகள் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவாா்கள். புதிய திட்டமானது, தில்லி மற்றும் என்சிஆா் எல்லையோர மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளைக் கடந்தால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவா்களைத் தவிா்த்து பிஎஸ் ஐய நான்கு சக்கர டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கிறது.

2017-ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள ஜிஆா்ஏபி நடவடிக்கைகள், பிராந்தியத்தில் காற்று மாசு அளவு மோசமடையத் தொடங்கும் போது அக்டோபா் 15 முதல் நடைமுறைக்கு வரும். சிஏக்யூஎம் அமைப்பானது காற்றின் தரக் குறியீட்டின் அடிப்படையில் இதை அக்டோபா் 1 முதல் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT