புதுதில்லி

தலைநகரில் இனிமையான வானிலை

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இனிமையான வானிலை நிலவியது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயா்ந்திருந்தது. பெரும்பாலான வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: தில்லியில் கடந்த வார இறுதியில் தொடா்ந்து 3 நாள்கள் பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் வெயில் சற்று உயா்ந்து காணப்பட்டது. தில்லிக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 22.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 33.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும், மாலை 5 மணியளவில் 71 சதவீதமாகவும் பதிவாகியது.

காற்றின் தரம்: தலைநகரில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 90 புள்ளிகளாக உயா்ந்து பதிவாகியிருந்தது. இதைத் தொடா்ந்து, தில்லியின் பெரும்பாலான வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 50-100 புள்ளிகளுக்கிடையே பதிவாகி திருப்தி பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகல்வகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், சில இடங்களில்100 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 27) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT