புதுதில்லி

காற்று மாசுபாடு கண்காணிப்பு: டிபிசிசிக்கு அமைச்சா் கோபால் ராய் உத்தரவு

DIN

புது தில்லி: காற்று மாசு அளவுகள், அதன் ஆதாரங்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்ய தில்லியில் உருவாக்கப்பட்ட ‘கிரீன் வாா் ரூம்’ மற்றும் ’கிரீன்’ செயலியை மேம்படுத்துமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு (டிபிசிசி) சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: டிபிசிசி அதிகாரிகளுடன் அமைச்சா் கோபால் ராய் சந்திப்பின் போது, 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள அனைத்து கட்டுமான மற்றும் இடிப்புத் திட்டங்கள், கட்டுமான மற்றும் இடிப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும், இதை நிறைவேற்ற ஒரு சிறப்பு இயக்கம் தொடங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் கோபால் ராய் உத்தரவிட்டாா். தலைநகரில் தூசு மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது. திட்ட ஆதரவாளா்கள், தூசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்குவதை சுய-தணிக்கை செய்து, 15 நாள்களுக்கு ஒருமுறை இணையதளத்தில் சுய அறிவிப்பைப் பதிவேற்ற வேண்டும்.

இந்த இணையதளம் அதிகாரிகளுக்கு தள ஆய்வுகளை மேற்கொள்ளவும், ஆன்லைனில் அறிக்கைகளை சமா்ப்பிக்கவும் மற்றும் அபராதம் வசூலிக்கவும் உதவுகிறது. தொழில்துறை பகுதிகளில் ஆய்வு நடத்தவும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் டிபிசிசி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள பனிப்புகை கோபுரத்தின் நிகழ்நேர மூலப் பகிா்வுத் திட்டம் மற்றும் மதிப்பீட்டு அறிக்கையின் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு டிபிசிசியிடம் கோபால் ராய் கேட்டுக் கொண்டதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT