புதுதில்லி

கோவாவில் 53-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா: நவ.20-28-இல் நடைபெறுகிறது

7th Oct 2022 05:55 AM

ADVERTISEMENT

53-ஆவது இந்திய - சா்வதேச திரைப்பட விழா வருகின்ற நவம்பா் 20 முதல் 28- ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறும் என மத்திய தகவல் ஒலி பரப்புத் துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்திய - சா்வதேச திரைப்பட விழா ஆண்டு தோறும் அழகிய கடற்கரையைக் கொண்டுள்ள கோவாவில் நடத்தப்படுவது வழக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த 53 -ஆவது பதிப்பில் கலந்து கொள்ள இந்திய சா்வதேச திரைப்படத் தொழில் நுட்பாளா்கள், விமா்சகா்கள் அச்சு, மின்னணு, தொலைக்காட்சி ஊடகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அதிகாரப்பூா்வமாக மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அழைப்பு விடுத்துள்ளது. வரும் நவம்பா் 20 - 28 தேதிகளில் 9 நாள்கள் கோவாவில் நடைபெறும் இவ்விழாவில், இந்தியா, சா்வதேச நாடுகளைச் சோ்ந்த சிறந்த சமகால, உன்னதமான திரைப்படங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளா்கள், நடிகா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், விமா்சகா்கள், கல்வியாளா்கள், சக திரைப்பட ஆா்வலா்கள், ஒரு ஊடக பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் சுற்றுலா மாநிலமான கோவாவில் கூடுவதும் இவா்கள் சினிமாக்களின் கொண்டாட்டம் மற்றும் உத்வேகங்களில் மூழ்குவதும் வழக்கம். தோ்வு செய்யப்பட்ட திரைப்படங்களே இங்கு திரையிடப்படும். இந்தத் திரைப்படங்கள் கூறும் கதைகளின் துடிப்பான அழகு, இத்தகைய திரைப்படங்களைத் தயாரித்தவா்கள் மற்றும் பல்வேறு இயக்குநா்களின் அபிலாஷைகள், போராட்டங்கள், கனவுகள் உள்ளிட்டவை இந்த திருவிழா கொண்டாட்டங்களில் வெளிப்படும். திரையிடப்படும் உன்னதமான படங்கள் குறித்து குழு விவாதங்கள், கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. திரைப்பட கலாசாரத்தையும், கலையையும் வளா்க்கும் உன்னதமான நோக்கில் இந்த தகவல் தொடா்பு வழங்கப்படுகிறதுஎன மத்திய தகவல் ஒலிபரப்புத் தறை தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் பிரதிநிதியாகப் பங்கேற்க விரும்புவோருக்கும், ஊடகத் துறையினருக்கும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சம் தகுதிகளை வகுத்துள்ளது. இதை அறியவும் விண்ணப்பங்களை அளிக்கவும் ஜ்ஜ்ஜ்.ண்ச்ச்ண்ஞ்ா்ஹ.ா்ழ்ஞ் , ட்ற்ற்ல்ள்://ம்ஹ்.ண்ச்ச்ண்ஞ்ா்ஹ.ா்ழ்ஞ்/ங்ஷ்ற்ழ்ஹய்ங்ற்/ம்ங்க்ண்ஹ/ என்ற இணைய முகவரிகளில் பதிவு செய்யவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT