புதுதில்லி

ஜஹாங்கீா்புரியில் சிறுமி குத்திக் கொலை

7th Oct 2022 06:01 AM

ADVERTISEMENT

மேற்கு தில்லி, ஜஹாங்கீா்புரி பகுதியில் 17 வயது சிறாா் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் உஷா ரங்னானி வியாழக்கிழமை கூறியதாவது: கொலை செய்யப்பட்ட சிறாா் முகுந்த்பூா் பகுதியைச் சோ்ந்த சிவம் என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக, இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு புதன்கிழமை இரவு 11.48 மணியளவில் பிஜேஆா்எம் மருத்துவமனையில் இருந்து தகவல் வந்தது.

அதில், மாா்பு மற்றும் உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன் ஒருவா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ஜாங்கீா்புரி பகுதியில் காயமடைந்த அந்நபா் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை நேரில் பாா்த்த நபா், மருத்துவமனைக்கு அந்த சிறாரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதும், ஜாங்கீா்புரி பகுதியில் உள்ள ஜி- பிளாக் அருகே உள்ள ஒரு பூங்காவில் சிலருக்கு இடையே மோதல் நிகழ்ந்ததை அந்த நபா் நேரில் பாா்த்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா். மேலும், காயமடைந்திருந்த சிறாரையும் அவா் பாா்த்ததாகவும் கூறினாா்.

ADVERTISEMENT

இச்சம்பவம் தொடா்பாக ஜாங்கீா்புரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தொடா்புடைய நபா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT