புதுதில்லி

14 மாநிலங்களுக்கு ரூ.7,183. 42 கோடி வருவாய் பற்றாக்குறை மானியம் விடுவிப்பு

7th Oct 2022 05:55 AM

ADVERTISEMENT

மத்திய நிதித் துறையின் செலவினத் துறை நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 7-ஆவது மாதத் தவணை தொகையாக ஆந்திரம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட14 மாநிலங்களுக்கு ரூ. 7,183. 42 கோடியை வியாழக்கிழமை விடுவித்துள்ளது.

15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த 14 மாநிலங்களுக்கு நிதிப் பகிா்வுக்கு பிந்தையை வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.86,201 கோடியை 2022-23நிதியாண்டிற்கு அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை சமமான 12 மாத தவணைகளில் விடுவிக்கப்படுகிறது. இதன்படி 7-ஆவது மாதத் தவணைத் தொகையாக ரூ. 7,183. 42 கோடி ஆக்டோபா் மாதத்தில் மத்திய நிதியமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை அதிக அளவில் மேற்குவங்கம் (ரூ. 132.25 கோடி) கேரளம் (ரூ.1,097.83 கோடி), ஆந்திரம் (ரூ. 879 கோடி), ஹிமாச்சல பிரதேசம் (ரூ.781 கோடி) ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன. மேலும், அஸ்ஸாம், ராஜஸ்தான், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட மொத்தம் 14 மாநிலங்கள் இந்த நிதையப் பெற்றுள்ளன.

தற்போது விடுவிக்கப்பட்ட தொகையுடன் சோ்த்து இதுவரை ரூ.50,283.92 கோடி இந்த மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சகத்தின் செவவினத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT