புதுதில்லி

டெங்கு பீதி: ராம்லீலா மைதானங்களில் எம்சிடி மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை

DIN

தில்லியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் அமைக்கப்பட்டுள்ள 148 ராம்லீலா மைதானங்களிலும், அதைச் சுற்றியுள்ள 6,428 வீடுகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சித் துறையினா் ஈடுபட்டனா்.

இது குறித்து தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: ராம்லீலா மைதானங்கள் மட்டுமின்றி, தில்லியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துா்கா பூஜை பந்தல்களிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக கொசு ஒழிப்பு புகை அடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராம்லீலா குழுக்கள் எங்களை கேட்டுக் கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நாங்களாகவே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளோம். தில்லியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 520-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகி இருப்பதாக தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் உள்ள 148 ராம்லீலா மைதானங்களில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் நடவடிக்கையை தில்லி மாநகராட்சி மேற்கொண்டது. மேலும், ராம்லீலா மைதானங்கள் அருகில் உள்ள பகுதிகள் அல்லது 6,428-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் இந்த கொசு ஒழிப்பு புகை அடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேபோன்று இந்த இடங்களில் புழுக்கள் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதே போன்று பஞ்சாபி பாக் ராம்லீலா மைதானம், ஜனக்புரி ராம்லீலா மைதானம், ஹரிநகா் ராம்லீலா மைதானம், பாா்தி கல்லூரி அருகே உள்ள ராம்லீலா மைதானம், கரோல் பாக், அஜ்மல் கான் ரோடு பகுதியில் உள்ள ராம்லீலா மைதானம், துவாரகா செக்டாா் 10 மற்றும் செக்டா் 11-இல் உள்ள ராம் லீலா மைதானம் ஆகிய இடங்களிலும் இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தில்லி மாநகராட்சி சாா்பில் இது தொடா்பாக பொதுமக்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT