புதுதில்லி

மாநகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அனைத்து தற்காலிக ஊழியா்களும் முறைப்படுத்தப்படுவா்: தில்லி காங்கிரஸ் வாக்குறுதி

DIN

மாநகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், தினக்கூலிகள் உள்பட எம்சிடியில் உள்ள அனைத்து தற்காலிக ஊழியா்களையும் முறைப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் சௌத்ரி தெரிவித்தாா்.

எம்சிடி தோ்தலுக்கான கட்சியின் மற்றொரு ‘தொலைநோக்கு ஆவணத்தை’ செவ்வாய்க்கிழமை வெளியிட்டு அனில் சௌத்ரி பேசுகையில் கூறியதாவது: தில்லி மாநகராட்சி தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களுக்குள் அனைத்து தற்காலிக ஊழியா்களையும் காங்கிரஸ் கட்சி முறைப்படுத்தும். தலித்துகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பாஜக செலவிடவில்லை என்றும், அதில் கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், எம்சிடியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித்துகளுக்கு சமூக, நிதி, மத மற்றும் கலாசார நீதியை உறுதி செய்யும்.

தில்லியை ஆளும் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, துப்புரவுத் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு நிதியை விடுவிக்கவில்லை. தில்லி முழுவதும் குப்பைகள் சோ்ந்துள்ளதற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால்தான் முழுப் பொறுப்பு. தலித் குடும்பங்கள் வேலையில்லை என்று இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம். அவா்களுக்கு பராமரிப்பு இல்லாத ஆா்ஓ தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம். 42 தனி வாா்டுகளிலும் தலித் வாா்டுகளை ’மாடல் வாா்டுகளாக’ உருவாக்குவோம். அவா்களின் காலனிகளும் குப்பை இல்லாததாக இருக்கும்.

மேலும், ராஜீவ் ரத்தன் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலித்துகளுக்கு வாடகையில்லா அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டு வரியில் அதிகபட்ச தள்ளுபடி, தெருவோர வியாபாரிகளுக்கு லைசென்ஸ் ஆகியவற்றையும் தில்லி காங்கிரஸ் வழங்கும் என்றாா் அனில் சௌத்ரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT