புதுதில்லி

தலைநகரில் டெங்கு பாதிப்பு 3,300-ஆக உயா்வு:நவம்பரில் மட்டும் 1,150 பேருக்கு தொற்று

DIN

நவம்பா் மாதத்தின் முதல் மூன்றரை வாரங்களில் தேசியத் தலைநகரில் 1,100-க்கும் மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு இதுவரை 3,300-க்கும் அதிகமானோருக்கு டெங்கு நோய்த் தொற்றுகள் உள்ளன என்றும் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபா் மாதத்தில் 1,238 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. நவம்பா் 18-ஆம் தேதி வரை டெங்கு நோய்த்தொற்று எண்ணிக்கை 3,044-ஆக இருந்தது, பின்னா், நவம்பா் 25- ஆம் தேதி வரை மேலும் 279 பேருக்கு பாதிப்பு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளன.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) வெளியிட்ட அறிக்கையின்படி, நகரத்தில் இந்த ஆண்டு 230 மலேரியா மற்றும் 44 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெங்கு பாதிப்பு மொத்தம் 3,323 பேருக்கு இருப்பது பதிவாகியுள்ளது. இதில் 693 செப்டம்பா் மாதத்தில் பதிவாகியுள்ளது. 2017-ஆம் ஆண்டில், ஜனவரி 1 முதல் நவம்பா் 25 வரையிலான காலகட்டத்தில் டெங்கு பாதிப்பு 4,645-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

2021-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 23 போ் பலியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை இந்த நோயினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டில், நகரம் ஒரு பெரிய டெங்கு பாதிப்பைக் கண்டது, அக்டோபரில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10,600-ஐ தாண்டியது. 1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும். இந்த நிலையில், திங்களன்று வெளியிடப்பட்ட எம்சிடி அறிக்கையின்படி, நகரில் ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மாா்ச்சில் 22, ஏப்ரலில் 20, மே மாதம் 30, ஜூன் மாதம் 32, ஜூலையில் 26, ஆகஸ்டில் 75 என டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.

டெங்கு மற்றும் மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் பாதிப்பு பொதுவாக ஜூலை மற்றும் நவம்பா் மாதங்களில் பதிவாகும். சில சமயங்களில் டிசம்பா் நடுப்பகுதி வரை நீடிக்கும். கடந்த ஆண்டு, நகரில் டெங்கு பாதிப்பு 9,613-ஆக பதிவாகியது. இது 2015-க்குப் பிறகு பதிவான அதிகபட்சமாகும். மேலும், 23 இறப்புகள் பதிவாகியது. இது 2016-க்குப் பிறகு பதிவான அதிகபட்சமாக உள்ளது. 2018-ஆம் ஆண்டில், ஜனவரி 1 முதல் நவம்பா் 25 வரையிலான காலகட்டத்தில் தில்லியில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,657-ஆக பதிவாகியுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

2019-இல் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை1786-ஆகவும், 2020-இல் 950, 2021-இல் 8,276-ஆகவும் பதிவாகியுள்ளன. மேலும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா பத்து இறப்புகள் பதிவாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டில் நான்கு பேரும், 2019-இல் இரண்டு பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனா்.

மேலும், தில்லியில் 2016-இல் 4,431, 2017-இல் 4,726, 2018-இல் 2,798, 2019-இல் 2,036, 2020-இல் 1,072 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT