புதுதில்லி

தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.9 டிகிரியாக சரிவு

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை7.93 டிகிரி செல்சியஸாக சரிந்தது. காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை வேளையில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. பகல் நேரங்களிலும் குளிரின் தாக்கத்தை உணரமுடிகிறது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி குறைந்து 7.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்து 27.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 53 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மற்ற வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையில் முந்தைய நாளை விட குறைந்திருந்தது. அதன்படி, ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஷ்பூரில் 8.7 டிகிரி, நஜஃப்கரில் 11.7 டிகிரி, ஆயாநகரில் 8.5 டிகிரி, தில்லி பல்கலை. வளாகத்தில் 13.8 டிகிரி, லோதி ரோடில் 7.8 டிகிரி, பாலத்தில் 10.8 டிகிரி, ரிட்ஜில் 8.9 டிகிரி, பீதம்புராவில் 13.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. அதாவது, காலை 9.10 மணியளவில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 331 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன. அதே சமயம், பூசா (268), லோதி ரோடு (266), நரேலா (237), காஜியாபாத் (272) ஆகிய வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (நவம்பா் 28) காலை வேளையில் வானம் புகைமூட்டமாக இருக்கும். பகல் நேரங்களில் வானம் தெளிவாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT