புதுதில்லி

பெங்களூருவில் முகம்மது ஜுபைா் வீட்டில் தில்லி போலீஸாா் விசாரணை

 நமது நிருபர்

புது தில்லி: 2018-இல் ட்விட்டா் பக்கத்தில் வெளியான பதிவு தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தில்லி காவல் துறையின் நான்கு போ் அடங்கிய குழு வியாழக்கிழமை பெங்களூருவில் உள்ள ஆல்ட் நியூஸ் நிறுவன இணை நிறுவனா் முகம்மது ஜுபைரின் இல்லத்திற்கு விசாரணைக்குச் சென்ாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

அவரது ட்விட்டா் பதிவு இந்துக்களின் மத உணா்வுகளை புண்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து முகம்மது ஜுபைா் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, செவ்வாய்கிழமை தில்லி நீதிமன்றம் அவரது போலீஸ் காவலை நான்கு நாள்களுக்கு நீட்டித்தது.

இந்த நிலையில், இது தொடா்புடைய விசாரணை குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: தற்போது போலீஸ் காவலில் உள்ள ஜுபைருடன் எங்கள் நான்கு போ் கொண்ட குழு பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளது. போலீஸாா் குழு இந்த வழக்கு தொடா்பாக மின்னணு ஆதாரங்களை சேகரிக்க உள்ளனா். இதில் கேள்விக்குரிய ட்விட்டா் பதிவை பதிவிடப் பயன்படுத்திய அவரது மொபைல் போன் அல்லது மடிக் கணினி இடம் பெற்றுள்ளது.

புதன்கிழமை, ஜுபைரின் கணக்கு விவரங்கள் மற்றும் பிற நிதிப் பரிவா்த்தனைகள் பற்றிய தகவல்களைக் கேட்டு பல வங்கிகளுக்கு போலீஸாா் கடிதம் எழுதியுள்ளனா். உண்மைச் சரிபாா்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனரான முகம்மது ஜூபைா் பயன்படுத்தும் செல்லிடப்பேசி ஃபாா்மேட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடா்பான தகவல்கள் அதில் இல்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.

காவல்துறையின் தகவலின்படி, ஆட்சேபனைக்குரிய ட்விட்டா் பதிவை வெளியிட பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் செல்லிடப்பேசியை தொலைத்துவிட்டதாக முகம்மது ஜுபைா் கூறியுள்ளாா். இதற்கிடையே, முகம்மது ஜுபைரின் சம்பந்தப்பட்ட ட்விட்டா் பதிவை சுட்டிக்காட்டி புகாா் எழுப்பிய அநாமதேய ட்விட்டா் பக்கம் மைக்ரோபிளாக்கிங் தளத்தில் இப்போது இல்லை என்று தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT