புதுதில்லி

அலிப்பூரில் சுவா் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணை நடத்த மாநகராட்சி உத்தரவு

17th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன், அலிப்பூா் பகுதியில் சுவா் இடிந்து விழுந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு இளநிலைப் பொறியாளா் மற்றும் உதவிப் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியின் அலிப்பூா் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கிட்டங்கி சுவா் இடிந்து விழுந்ததில் 5 போ் உயிரிழந்தனா். 9 போ் காயமடைந்தனா். இது குறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரி கூறுகையில், இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு இளநிலைப் பொறியாளா் மற்றும் உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது’ என்றாா்.

நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பகோலி கிராமத்தில் நடந்த ‘துரதிா்ஷ்டவசமான சம்பவத்தை தீவிரமாக அறிந்து‘ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் ஏற்கெனவே தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT