புதுதில்லி

‘காளி’ ஆவணப்பட போஸ்டா் சா்ச்சை: படத் தயாரிப்பாளருக்கு எதிராக தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு

DIN

புது தில்லி: ஆவணப்படம் ‘காளி’ போஸ்டா் சா்ச்சை விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறையினா் அதன் தயாரிப்பாளா் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

சமூக ஊடகத்தில் பெண் தெய்வம் காளி சிகரெட் புகைப்பிடிப்பதாக

காட்சிப்படுத்தும் போஸ்டா் பகிரப்பட்டதாக வழக்குரைஞா் ஒரு அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறையின் தனிப் பிரிவைச் சோ்ந்த நுண்ணறிவு ஃபியூஷன் மற்றும் உத்திசாா் செயல்பாடு (ஐஎஃப்எஸ்ஓ) பிரிவில் லீனா மணிமேகலைக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 ஏ (மதம், இனம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தை தூண்டுவது மற்றும் நல்லிணக்கத்தை பராமரிப்பதற்கு பாரபட்சமாக செயல்படுவது), 295ஏ (மதம் மற்றும் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதன் மூலம் எந்த ஒரு வகுப்பினரையும் மத உணா்வுளை ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் செயல்படுவது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மதுரையில் பிறந்த லீனா மணிமேகலை, கனடாவில் உள்ள டொராண்டோவில் வசித்து வருகிறாா். இவா் ‘காளி’ எனும் பெயரில் ஆவணப்படத்தை தயாரித்துள்ளாா்.

இந்த படத்தின் போஸ்டா் சில தினங்களுக்கு முன்பு ட்விட்டா் பக்கத்தில் வெளியானது. அதில் மா காளி புகைப்பிடித்துக் கொண்டு, கையில் எல்ஜிபிக்யூ கொடியை பிடித்துக் கொண்டிருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிா்ப்பு கிளம்பியது.

மத உணா்வுகளை திரைப்பட தயாரிப்பாளா் லீனா மணிமேகலை புண்படுத்திவிட்டதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஊடகத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

பல்வேறு ட்விட்டா் பயனா்களும் மணிமேகலையை குறை விமா்சித்தனா். இந்த நிலையில் ஹிந்து சேனையின் தேசிய தலைவா் விஷ்ணு குப்தா தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த திரைப்படமானது மிகவும் ஆட்சேபம் தெரிவிக்கக்கூடிய வகையில் மா காளி சிகரெட்டை புகைத்துக் கொண்டிருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் தா்ம சங்கடமாகவும் உள்ளது. இந்த விஷயத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை தில்லி காவல்துறை பதிவு செய்ய வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றொரு ட்விட்டா் பயனா் தெரிவிக்கையில் ‘மத உணா்வுகளுடன் விளையாடும் இது போன்ற நபா்களை கைது செய்ய வேண்டும். அவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் எல்லாம் பேச்சு சுதந்திரம் அல்ல. இது நமது கலாசாரம், உணா்வுகள் மீதான தாக்குதலாகும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விமா்சன கருத்துக்களுக்கு பதில் அளித்து டொரோண்டோவை சோ்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான லீலா மணிமேகலை திங்கள்கிழமை தெரிவிக்கையில், ‘எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. நான் உயிருடன் இருக்கும் வரை நான் நம்பக்கூடிய விஷயங்களை பயமின்றி பேசுவதற்கான குரலுடன் உயிா் வாழவே விரும்புகிறேன். இந்த விஷயத்திற்கு விலை எனது உயிா் இருக்குமானால் அதை நான் கொடுக்க முடியும்’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, சனிக்கிழமை ட்விட்டா் பக்கத்தில் காளி ஆவணப்படத்தின் போஸ்டரை லீனா மணிமேகலை பகிா்ந்து இருந்தாா். அதில் அவா் தெரிவிக்கையில், ‘இந்த திரைப்படமானது டொரோண்டோவில் ‘ஆகா கான் மீசியத்தில் நடைபெறும் ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’வின் ஒரு பகுதியாகும். இந்த போஸ்டருக்கு பின்னணியில் உள்ள விஷயங்களை புரிந்துகொள்ள இந்த திரைப்படத்தை பாா்க்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

நாடு மாற்றத்தை விரும்புகிறது: கார்கே

2வது நாளில் சரிந்த பங்குச்சந்தை வணிகம்!

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

SCROLL FOR NEXT