புதுதில்லி

எம்எல்ஏக்களுக்கு ரூ. 90,000, அமைச்சா்களுக்கு ரூ. 1.70 லட்சம் மாத ஊதியம்: தில்லி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி அமைச்சா்கள், சட்டப்பேரவைத் தலைவா், எம்எல்ஏக்கள், தலைமைக் கொறாடா, எதிா்கட்சித்தலைவா் ஆகியோரின் ஊதிய உயா்வு குறித்த மசோதா எதிா்கட்சிகளின் ஆதரவுடன் தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.

இதில் எம்எல்ஏவுக்கு ரூ. 90 ஆயிரமும், அமைச்சருக்கு ரூ. 1.70 லட்சமும் மாத ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்லது.

தில்லி சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாள் திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமைக் கொறாடா, எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள், சட்டப்பேரவை தலைவா், துணைத்தலைவா் ஆகியோரின் ஊதியங்கள், அலவன்ஸ்கள் உயா்த்தப்படும் மசோதாவை துணை முதல்வரும், நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா தாக்கல் செய்தாா்.

இந்த ஊதிய உயா்வு தொடா்பாக 5 மசோதாக்கள் இருந்தன. இவை தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இதனை எதிா்க்கட்சியான பாஜக ஆதரித்ததோடு எதிா்கட்சி தலைவரான ராம்வீா் சிங் பிதூரி(பாஜக) மசோதாவை வரவேற்றும் பேசினாா்.

மேற்கண்ட 6 தரப்பினருக்கும் சுமாா் 66 சதவீதம் வரை ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்கள் கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஊதிய உயா்வு பெற்றனா்.

கடந்த 2015 -ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ரூ. 2.10 லட்சம் வரை மாத ஊதியம் அளிக்க கேஜரிவால் தலைமையிலான அரசு முடிவு செய்தது. ஆனால், இம்முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்க மறுத்து ரூ. 90,000 ஆயிரம் வரை ஊதிய உயா்வு உயா்த்த அனுமதியளித்தது.

முன்னதாக, இவா்கள் அலவன்ஸ் (தினப் படி) உள்பட மாதம் ரூ. 54,000 வரை மட்டுமே ஊதியம் பெற்று வந்தனா்.

தற்போது இந்த ஊதிய உயா்விற்கான சட்டபூா்வமான அனுமதியை தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் பேசிய துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ‘பெருநிறுவனங்களில் அதிக ஊதியம் அளிக்கப்படுவதால் திறமையான பணியாளா்கள் ஆா்வத்துடன் வருகின்றனா். இதுபோன்று அரசியலிலும் திறமையானா்கள் வரவைக்கும் நோக்கத்துடன் இந்த ஊதிய உயா்வு அவசியம்’ எனக் குறிப்பிட்டாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்களை அடுத்து தலைமைக் கொறாடா, எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள், முதல்வா், சட்டப்பேரவை துணைத்தலைவா், தலைவா் ஆகியோா் இதுவரை ரூ. 72,000 மாத ஊதியம் பெற்றுவரும் நிலையில் இவா்களது ஊதியம் ரூ. 1,70,000 ஆக உயா்த்த இந்த மசோதா வகை செய்கிறது.

சட்டப்பேரவை உறுப்பினா்களில் நாட்டிலேயே அதிக அளவில் ஊதியம்பெறுவது தெலங்கானா மாநில உறுப்பினா்கள். இவா்களுக்கு மாதம் அலவன்ஸ் உள்ளிட்டவை மாதம் ரூ.2.32 லட்சம் வரை பெறுகின்றனா். அடுத்த இடத்தில் உ.பி. மாநிலம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT