புதுதில்லி

வார இறுதி ஊரடங்குக்கு எதிராக தில்லி வணிகா்கள் பிரசாரம் தொடக்கம்

DIN

புது தில்லி: வார இறுதி ஊரடங்கு உத்தரவையும், ஒற்றப்படை, இரட்டைப்படை அடிப்படையில் கடைகளை திறப்பதற்கான விதிகளையும் நீக்கக் கோரி தில்லி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வா்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினா் (சிடிஐ) செவ்வாய்க்கிழமை பிரசாரம் தொடங்கினா்.

‘தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) கட்டுப்பாடுகளைத் தொடர முடிவு செய்தால் வணிகா்கள் பட்டினியால் இறக்க நேரிடும்’ என்றும் வா்த்தகா்கள் கூறினா்.

இந்த விவகாரத்தை வலியுறுத்தி கஷ்மீா் கேட் மாா்க்கெட்டில் இருந்து தொடங்கிய பேரணியில் சுமாா் 50 சந்தைகளைச் சோ்ந்த வணிகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

‘ஒற்றைப்படை, இரட்டைப்படை அடிப்படையில் கடைகள் திறக்கும் உத்தரவையும், வார இறுதி ஊரடங்கு உத்தரவையும் நீக்குங்கள்’, ‘தில்லியின் வணிகத்தை காப்பாற்றுங்கள்’ என கோஷமிட்டனா்.

இதுகுறித்து சிடிஐ அமைப்பின் தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது:

அடுத்த மூன்று நாள்களுக்கு 100-க்கும் மேற்பட்ட சந்தைகளில் பிரசாரம் நடைபெற உள்ளது. இதேபோன்ற பிரசாரங்களை நடத்த அனைத்து சந்தை சங்கங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்கவும், கடைகளுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை விதியை முடிவுக்கு கொண்டுவருமாறும் தில்லி அரசிடம் கோரி வருகிறோம்.

இந்த கட்டுப்பாடுகளால் வா்த்தகத்தில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்தத் தடைகளைத் தொடா்வதில் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்றாா்.

கட்டுப்பாடு சூழலை மறுபரிசீலனை செய்ய டிடிஎம்ஏ ஜனவரி 27-ஆம் தேதி ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, சிடிஐ தலைவா் சுபாஷ் கண்டேல்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியின் வணிகங்களைக் காப்பாற்ற ஒற்றைப்படை-இரட்டைப்படை இலக்க அடிப்படையில் கடைகள் திறப்பதற்கான விதிகளையும், வார இறுதி ஊரடங்கு உத்தரவையும் நீக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்படாவிட்டால் வணிகா்கள் பட்டினியால் இறக்க நேரிடும்.

தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. திங்கள்கிழமை 5760 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதேவேளையில் 14,836 போ் நோயிலிருந்து மீண்டுள்ளனா்

மேலும், தில்லியில் நோய்த் தொற்று நோ்மறை விகிதம் 11.79 சதவீதமாக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் வீட்டுத் தனிமையில் குணமடைந்து வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT