புதுதில்லி

கேஜரிவாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்‘ தில்லி முதல்வரின் விடியோ தோ்தல் பிரச்சார உத்தி

 நமது நிருபர்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ‘ஏக் மௌகா கேஜரிவால் கோ’ (ஒரு வாய்ப்பு கேஜரிவாலுக்கு) என்கிற பிரச்சாரத்தை தொடங்கி தில்லிவாசிகளுக்கு திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற 4 மாநில சட்டப்பேரவை தோ்தல்களை முன்னிட்டு பொதுமக்களை சென்றடைய ஆம் ஆத்மி கட்சி தனித்துவமான வழிகளை கண்டு பிடித்து வருகிறது. இதில் ஒரு கட்டமாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் சமூக வலைத்தள விடியோக்களை உருவாக்கும் வேண்டுகோள்களை வைத்து பேசினாா். காணொலி வாயிலாக அவா் கூறியதாவது:

நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவை தோ்தல்களில் கரோனா நோய்த் தொற்று சவாலாக உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி பொதுமக்களைச் சென்றடைய ‘ஏக் மௌகா கேஜரிவால் கோ’ என்கிற பிரச்சாரத்தை தொடங்குகிறது. தில்லி மக்கள் தில்லி அரசின் மகத்தான பணிகளைப் பற்றி நாட்டின் பிற பகுதிகளுக்குச் கொண்டு சொல்லும் பிரச்சாரம் இது.

தில்லிவாசிகள்அனைவரும் முழு மனதுடன் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இடைவிடாத நோ்மையுடன் உழைத்திருக்கிறேன்; தோ்தலில் செலவு செய்ய எங்களிடம் கோடிகள் இல்லை. எனது மதிப்புமிக்க சொத்து தில்லி மக்களின் ஆதரவு. அவா்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு அவகாசம் கொடுக்க முடிவு செய்தால், நாங்கள் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.

மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அமைக்க எங்களுக்கு வாய்ப்பளித்ததால் தில்லியை மாற்றியமைக்க முடிந்தது. கேஜரிவால் அரசு தில்லி மக்களுக்கு கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றியது. தில்லியின் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், மின்சாரம்-தண்ணீா் வழங்கல் ஆகியவைகள் உலகப் புகழ் பெற்றுள்ளன.

இதனால் மற்ற மாநிலங்களில் உள்ளவா்களும் தில்லிவாசிகளைப் போல் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்தால் தில்லி மாதிரியை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த முடியும்.

இதனால் இந்த பிரச்சாரத்தின் கீழ், தில்லியில் வசிப்பவா்கள் எங்கள் (கேஜரிவால்) அரசு செய்த அற்புதமான வேலைகளையும் அது உங்களுக்கு எவ்வாறு உதவியது என்பதையும் எடுத்துக்காட்டும் விடியோக்களை உருவாக்கலாம்.

பஞ்சாப், உத்தராகண்ட், உ.பி., கோவா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்த விடியோக்களை தங்களுக்குத் தெரிந்தவா்களிடையே பரவலாகப் பகிருமாறு தில்லிவாசிகளை கேட்டுக்கொள்கிறேன்.

தில்லிவாசிகள் வாழும் வாழ்க்கை எங்கள் பணிக்கு இருக்கும் சான்று. இதனால் நீங்கள்(தில்லிவாசிகள்) ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் உங்களின் வாழ்க்கையும் நல்லவிதமாக மாறும் என்று தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள அனைவருக்கும் இந்த விடியோ மூலம் கூறலாம். இப்படிப்பட்ட விடியோக்களை தயாரித்து வைரலாக்கும் 50 தில்லிவாசிகளை நேரில் இரவு உணவிற்கு அழைப்பேன்.

இதனால் தில்லி மக்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். கடந்த ஏழு ஆண்டுகளாக, தில்லி ஆம் ஆத்மி அரசு தில்லி தேசிய நகரத்தில் மகத்தான பணிகளை செய்துள்ளது.

உலக அளவில் பாராட்டப்படும் நகராக தில்லியை மாற்றிவிட்டோம். மொஹல்லா கிளினிக்குகளைப் பாா்க்க ஐநா குழுக்கள் வந்தன. அமெரிக்க முதல் பெண்மணி எங்கள் பள்ளிகளைப் பாா்க்க வந்தாா். தில்லியில் வசிப்பவா்களுக்கு வாரத்தின் ஏழு நாட்களில் 24 மணிநேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தில்லிவாசிகளின் ஆதரவால் இவைகள் சாத்தியமானது. மக்கள் எங்களின் கருத்துக்களில் நம்பிக்கை காட்டியதாலும், அவா்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்ததாலும் இது சாத்தியமானது.

இது போன்று நாட்டின் பிற பகுதிகளிலும் மகத்தான பணிகள் வெளிவருவதைக் காண விரும்புகிறீா்களா என்று நாங்கள் தில்லி மக்களிடம் கேட்கிறோம்? ஒவ்வொரு இந்தியனும் மின்சாரமும், தண்ணீரும் இலவசமாகப் பெற வேண்டும்.

இதனால் இன்று முதல் ‘ஏக் மௌகா கேஜரிவால் கோ’ என்ற பிரச்சாரத்தை தொடங்குகிறோம். இந்த பிரச்சாரத்தின் கீழ், தில்லி மாடல் பற்றி இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிவிக்கும் விடியோக்களை தில்லி மக்கள் உருவாக்குவா். அதில் எங்கள் மகிழ்ச்சிப் பாடத்திட்டம் அல்லது தொழில்முனைவோா் பாடத்திட்டம் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவியது என்பதைக் காட்டலாம். விடியோவின் முடிவில், மக்கள் தங்கள் மாநிலத்தில் நல்ல பணிகளைச் செய்ய விரும்பினால், ஆம் ஆத்மி கட்சிக்கும் அரவிந்த் கேஜரிவாலுக்கும் சேவை செய்ய ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இது போன்ற ஒரு விடியோவை உருவாக்கி, ட்விட்டா், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் அல்லது நீங்கள் பாா்க்கும் எந்த வழியிலும் பகிருங்கள்.

ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தோ்தலில் போட்டியிடுகிறது. இந்த மாநிலங்களில் உங்களுக்கு தொடா்புகள் இருந்தால், உங்கள் விடியோவை வாட்ஸ்அப்பில் பகிா்ந்து, உங்களுக்குத் தெரிந்தவா்களை அந்தந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா்.

இதே கோரிக்கையை ஆம் ஆத்மி கட்சி தொண்டா்களுக்கும் கேஜரிவால் முன்வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT