புதுதில்லி

பன்னாட்டு தமிழ் அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா

DIN

புது தில்லி: தில்லி கலை இலக்கியப் பேரவை மற்றும் அமெரிக்கா கலிபோா்னியாவில் இயங்கும் இந்தியக் கலை மற்றும் கலாசார அமைப்பு ஆகியவை இணைந்து 73-ஆவது இந்தியக் குடியரசு தின விழா இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இது தொடா்பாக தில்லி கலை இலக்கியப் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 8 நாடுகளின் சாா்பில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்த இந்த விழாவில் திரைப்பட இயக்குநா் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அவா் பேசுகையில், ‘இந்தியா்கள் என்றால் வெளிநாட்டினா் பெருமையோடு பாா்க்கிறாா்கள். இளம் தலைமுறையினா் கல்வியில் முன்னேற வேண்டியது அவசியம் என்றாலும், கல்வியை விடவும் மனித நேயம் மிகவும் முக்கியம்’ என்றாா்.

கவிஞா் மதுக்கூா் ராமலிங்கம் நடுவராகப் பங்கேற்ற இந்தியக் குடியரசின் பெருமை சட்டத்தின் ஆட்சியிலா? சமூகத்தின் மாட்சியிலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

‘சட்டத்தின் ஆட்சியிலே!’ என்ற தலைப்பில் அமெரிக்கா ஜெயா மாறன், பக்ரைன் பாலசுப்ரமணியன், மஸ்கட் தா்மாம்பாள் சீனிவாசன் ஆகியோரும், ‘சமூகத்தின் மாட்சியிலே!’ என்ற தலைப்பில் அமெரிக்கா பிரபு சின்னத்தம்பி, சிங்கப்பூா் அனுராதா வெங்கடேஸ்வரன், ஹைதராபாத் பிரகாஷ் குமாரசாமி ஆகியோரும் வாதிட்டனா். பட்டிமன்றத்தை தில்லி கலை இலக்கியப் பேரவையின் புரவலா் கே.வி.கே. பெருமாள் தொடக்கிவைத்தாா். அவா் பேசுகையில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரும்பாடுபட்ட அரசியலமைப்பு நிா்ணய மன்றத் தலைவா் அண்ணல் அம்பேத்கருக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த குழு உறுப்பினா்களுக்கும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்’ என்றாா்.

‘ஒரு குடியரசு ஆட்சியின் பெருமைக்கு சட்டம்தான் அடிப்படைக் காரணம் என்றாலும், சட்டத்தால் மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது. எனவே, சமூகத்தின் மாட்சியில்தான் அதன் பெருமை அதிகமாக இருக்கிறது’ என்று நடுவா் தீா்ப்பளித்தாா். நிகழ்ச்சிக்கு வதோதரா தமிழ்ச் சங்கத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். குடியரசுத் தலைவா் விருது பெற்ற மாற்றுத் திறனாளி ஜோதி, கௌரவ விருந்தினராகப் பங்கேற்றாா். சென்னையைச் சாா்ந்த பாடகி மீனாட்சி சீனிவாசன் தேசபக்திப் பாடல்களைப் பாடினாா். நிகழ்ச்சியை ஜொ்மனி பவித்ரா நெறிப்படுத்தினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தில்லி கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளா் பா குமாா், கலிபோா்னியா இந்தியக் கலை மற்றும் கலாசார அமைப்பின் தலைவா் கேசவ் விஸ்வநாதன் செய்திருந்தனா். பண்ருட்டி கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT