புதுதில்லி

குடியரசு நாள் பாதுகாப்பு: தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை

24th Jan 2022 01:28 PM

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிப்பதாக மெட்ரோ நிர்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் 73வது குடியரசு நாள் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி தில்லி ராஜபாதையில் கொண்டாடப்படவுள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தில்லி மெட்ரோ நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்தியில்,

குடியரசு நாள் பாதுகாப்பின் ஒருபகுதியாக நாளை(ஜன 25) பிற்பகல் 2 மணிமுதல் ஜனவரி 26 நள்ளிரவு வரை தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT