புதுதில்லி

‘கேலோ இந்தியா’ மூலம் தடகள வீரா்கள்: 2,841 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்

 நமது நிருபர்

நாட்டில் தனித்துவம் வாய்ந்த, அசாதாரணமான விளையாட்டுத் திறமையாளா்களை பல்வேறு கூறுகளின் கீழ் மத்திய அரசு கண்டறிவதாக மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா். இதில் ‘கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்’ திட்டத்தின் மூலம் 2,841 தடகள விளையாட்டு வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா் எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.

தனித்துவம் வாய்ந்த மற்றும் அசாதாரணமான விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிய குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் அரசு திறமை இயக்கங்கள் நடத்தப்படுகிா போன்ற கேள்விகளை திமுக உறுப்பினா் கேஆா்என் ராஜேஷ்குமாா் மாநிலங்களையில் எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், ‘கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் “விளையாட்டு போட்டி மற்றும் திறமை மேம்பாடு கூறுகளின் கீழ், நாட்டில் தடகள வீரா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். கேலோ இந்தியா விளையாட்டுகள், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், திறந்த தோ்வு சோதனைகள் (ஓபன் செலக்ஷன் ட்ரெய்ல்ஸ்) ஆகியவற்றின் அடிப்படையில் விளையாட்டு வீரா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். மேலும், திறன்மிக்க விளையாட்டு வீரா்கள் தேடுதலுக்கான தேசிய விளையாட்டு இணையதளமும், இந்திய விளையாட்டு ஆணையம் திறமையான விளையாட்டு வீரா்களை அடையாளம் காணும் ஒரு தளத்தை வழங்குகிறது.

அடையாளம் காணப்பட்ட விளையாட்டு வீரா்கள் தேசிய மற்றும் சா்வதேச விளையாட்டுகளில் பங்கேற்கும் அளவிற்கு சிறந்து விளங்க பல்வேறு பயிற்சி வசதிகளை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளா்களின் வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்படுகிறது. தற்போது, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 2,841 விளையாட்டு வீரா்கள் நாடு முழுவதும் 21 தடகள விளையாட்டுப் பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜீவ் காந்தி நினைவு நாள்...

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

SCROLL FOR NEXT