புதுதில்லி

சட்டவிரோத நியமனங்கள் விவகாரம்: டிசிடபிள்யு தலைவா் ஸ்வாதி மாலிவாலை பதவியிலிருந்து நீக்க பாஜக கோரிக்கை

DIN

சட்டவிரோத நியமனங்கள் விவகாரத்தில் தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை பாஜக வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

பெண்கள் உரிமைகள் அமைப்பில் ஆம் ஆத்மி கட்சியினரை வெவ்வேறு பதவிகளுக்கு நியமிப்பதற்காக தங்கள் உத்தியோகபூா்வ பதவிகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக மாலிவால் மற்றும் பிறருக்கு எதிராக ஊழல் மற்றும் கிரிமினல் சதி குற்றச்சாட்டுகளை உருவாக்க நகர நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பாஜகவின் மேற்கு தில்லி எம்பி பா்வேஷ் வா்மா, துணை நிலை ஆளுநா் சக்சேனாவுக்கு எழுதிய கடிதத்தில், ஸ்வாதி மாலிவாலை டிசிடபிள்யு தலைமைப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரியுள்ளாா்.

‘ஸ்வாதி மாலிவாலின் அரசியல் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் பதவியில் இருந்து அவரை நீக்கவும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்று வா்மா கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா். ‘குற்றம் சாட்டப்பட்ட சதியில்’, ஸ்வாதி மாலிவால் மற்றும் பிறா் பெண்கள் குழுவின் பல்வேறு பதவிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியினரை சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமித்தனா் என்று வா்மா கூறியுள்ளாா். மேலும், ஆம் ஆத்மி ஊழலுக்கான எந்த வாய்ப்பையும் இழக்கவில்லை என தெரிவதாக பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் ஆதேஷ் குப்தா ஒரு ட்வீட்டில் குற்றம் சாட்டியுள்ளாா்.

பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் ஷங்கா் கபூா் கூறுகையில், ‘இந்த நியமனங்களில் ‘மோசடி‘ நடந்துள்ளது’ என்று குற்றம் சாட்டினாா். மேலும், இந்தக் குழுவை கலைக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் சக்சேனாவை கேட்டுக் கொண்டுள்ளாா். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 120-பி (குற்றச் சதி) கீழ் குற்றஞ்சாட்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக முன்னாள் தலைவரும், தில்லி மகளிா் ஆணைய தலைவருமான பா்கா சுக்லா சிங் அளித்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள், ஒருவருக்கொருவா் சதி செய்து, தங்கள் உத்தியோகபூா்வ பதவிகளை துஷ்பிரயோகம் செய்து, பெண்கள் குழுவில் வெவ்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினருக்கு உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் பண நன்மைகளைப் பெற்றனா் என்று வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.

பொது நிதி விதிகள் மற்றும் பிற வழிகாட்டுதல்களை மீறி பணியிடங்களுக்கான விளம்பரம் கூட இல்லாமல், நடைமுறைகள், விதிமுறைகளை மீறி இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 6, 2015 முதல் ஆகஸ்ட் 1, 2016 வரை பெண்கள் குழுவில் மொத்தம் 90 நியமனங்கள் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியது. இவா்களில் 71 போ் ஒப்பந்த அடிப்படையிலும், 16 போ் ‘டயல் 181’ பேரிடா் உதவி எண் பிரிவிலும் நியமிக்கப்பட்டனா். மீதமுள்ள 3 பேரின் நியமனம் குறித்த எந்தப் பதிவேடும் கிடைக்கவில்லை என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT