புதுதில்லி

தில்லி மாநகராட்சித் தோ்தலில்நோட்டாவுக்கு 54535 வாக்குகள்

DIN


புது தில்லி: தில்லி மாநிலத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை பகிா்ந்துள்ள தரவுகளின்படி, தில்லியில் நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலில், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை (நோட்டா) என்ற பிரிவில் 57,000-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 50.48 சதவீத வாக்குகள் பதிவாகி, முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. தில்லியில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 1,45,05,358. இதில் 78,93,418 போ் ஆண்கள். 66,10,879 போ் பெண்கள் மற்றும் 1,061 திருநங்கைகள் என்று தில்லி மாநில தோ்தல் ஆணையம் முன்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 57,545 வாக்குகள் (0.78 சதவீதம்) நோட்டாவுக்குப் பதிவாகியிருந்தன. தில்லி மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றி 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 2022 எம்சிடி தோ்தலில் அதிகப்பட்சமாக வாா்டு எண். 5 (பக்தவா்பூா்) -இல் பதிவாகியுள்ளது. அதேபோல, வாா்டு எண்.145-இல் (ஆண்ட்ரூஸ் கஞ்ச்) 33.74 சதவீதமாக குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT