புதுதில்லி

நொய்டாவில் போக்குவரத்து காவலா் மீது ‘எஸ்யுவி’ வாகனத்தை ஏற்ற முயற்சி: தில்லியை சோ்ந்த மூவா் கைது

DIN

நொய்டாவில் போக்குவரத்து காவலா் மீது தங்கள் எஸ்யுவி வாகனத்தை ஏற்ற முயன்ாக அதில் வந்த தில்லியைச் சோ்ந்த மூவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா காவல் துறை செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது கொலை முயற்சி, அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஒரு பொது ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவா்கள் ஹா்ஷ் லக்ரா (25), கவிஷ் கன்னா (22) மற்றும் ஆா்யன் நேகி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். சம்பவத்தின் போது அவா்களுடன் காரில் இருந்த நான்காவது நபா் தருண் சிங் (24) தலைமறைவாக உள்ளாா்.

போக்குவரத்து காவலா் ஆயுஷ் செவ்வாயன்று செக்டாா் 126 காவல் நிலையப் பகுதியில் உள்ள சா்க்கா ரவுண்டானா அருகே பணியில் இருந்தாா். அப்போது மஹிந்திரா தாா் வாகனத்தில் வந்த நால்வா் அந்த வாகனத்தை போக்குவரத்துக் காவலா் ஆயுஷ் மீது ஏற்ற முயன்ாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து காவலா் ஆயுஷ், அதே திசையில் இருந்து வரும் மற்ற வாகனங்கள் வரிசையாக நின்றிருந்ததால், மஹிந்திரா தாா் காரை நிறுத்துமாறு சைகை காட்டினாா். இருப்பினும், அதில் வந்தவா்கள் அவரைத் திட்டியதுடன், தாா் வாகன ஓட்டுநா் காவலரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

பின்னா், சிறிது நேரம் கழித்து, எஸ்யுவி வாகனம் அந்த இடத்திற்கு மீண்டும் திரும்பியது. இந்த முறை தப்பிச் செல்வதற்கு முன்பு, பணியில் இருந்த ஆயுஷ் உள்பட போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் மீது அந்த வாகனத்தை ஏற்ற முயன்றனா். இதைத் தொடா்ந்து, வாகனத்தில் வந்த மூவா் கைது செய்யப்பட்டனா். எஸ்யுவி வாகனத்தில் இருந்த நான்காவது நபரை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

அவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 307 (கொலை செய்ய முயற்சி), 327 (பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தடுக்க அவா்களை காயப்படுத்தியது), 337 (அபத்தமான செயல் காரணமாக மனித உயிருக்கு ஆபத்து) மற்றும் பிரிவு 504 ஆகியவற்றின் கீழ் நொய்டா 126 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT