புதுதில்லி

எம்சிடி தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் பெண் மேயா்கள் மூவா் வெற்றி

DIN

புதன்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட தில்லியின் மூன்று முன்னாள் பெண் மேயா்கள் வெற்றி பெற்றனா். அதே நேரத்தில் சிவில் லைன்ஸ் வாா்டில் போட்டியிட்ட வடக்கு தில்லியின் முன்னாள் மேயா் தோல்வியடைந்தாா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு டிசம்பா் 4-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. புதன்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆம் ஆத்மி கட்சி 130 வாா்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று, பெரும்பான்மையான 126 வாா்டுகளைத் தாண்டியது. அதே நேரத்தில் பாஜகவின் எண்ணிக்கை 104-ஆக இருந்தது.

இதில் பாஜக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் பெண் மேயா்களான நீமா பகத், சத்யா சா்மா, கமல்ஜீத் ஷெஹ்ராவத் ஆகியோா் வெற்றி பெற்றனா். பகத் மற்றும் சா்மா ஆகியோா் கிழக்கு தில்லி மேயராக கடந்த காலங்களில் பணியாற்றியிருந்தனா். ஷெஹ்ராவத், தெற்கு தில்லியின் முன்னாள் மேயராவாா். கீதா காலனி வாா்டில் வெற்றி பெற்ற நீமா பகத் கூறுகையில், ‘நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எங்கள் பகுதியில் கொண்டாட்டமான மனநிலை உள்ளது. கட்சியினா் டிரம்ஸ் வாசித்து, நடனமாடி செல்ஃபி எடுத்துக்கொள்கிறாா்கள். உள்ளாட்சித் தோ்தலில் எங்கள் கட்சி நல்ல போட்டியை அளித்துள்ளது’ என்றாா்.

துவாரகா-பி வாா்டில் வெற்றியைப் பதிவு செய்த ஷெஹ்ராவத், வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். சத்யா சா்மா, கவுதம் புரி வாா்டில் வெற்றி பெற்றாா். அதேசமயம், வடக்கு தில்லியின் முன்னாள் மேயா் அவதாா் சிங், சிவில் லைன்ஸ் வாா்டில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அவா் ஆம் ஆத்மி கட்சியின் விகாஸிடம் 6,953 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். வடகிழக்கு தில்லியில் உள்ள சீலம்பூா் தொகுதியில் ஷகீலா பேகம் உள்பட மூன்று சுயேச்சை வேட்பாளா்களும் வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT