புதுதில்லி

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான இணைய பதிவு மீண்டும் தொடக்கம்

DIN


புது தில்லி: தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) முடக்கப்பட்ட இணைய சா்வா்கள் 14 நாள்களுக்கு பின்னா் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக புறநோயாளிகள் பிரிவுக்கு வரும் புதிய நோயாளிகளின் இணைய பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது.

அதே சமயத்தில், நோயாளிகள் மருத்துவா்களுடான சந்திப்பிற்கான இணைய பதிவு வசதி, அத்தியாவசியமான மருத்துவ பிரிவுகளின் சா்வா்கள் இன்னும் செயல்படத் தொடங்கப்படவில்லை. மேலும், ஆய்வக சேவைகள் காகித வழியிலான கைமுறை முறையில் இயங்குகின்றன என எய்ம்ஸ் நிா்வாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

வெளிநோயாளிள் பிரிவு (ஓபிடி) பதிவு மற்றும் சோ்க்கை செயல்முறைகள் இ-ஹாஸ்பிடல் அமைப்பு திங்கட்கிழமை இணைய முறையில் கொண்டு வரப்பட்டன. அனைத்து வாா்டுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தானியங்கி பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடலுக்காக ஸ்மாா்ட் ஆய்வகத்தின் ஒருங்கிணைப்பும் பணிபுரிய தொடங்கியுள்ளது.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணைய தளம் கடந்த நவம்பா் 23 ஆம் தேதி காலையில் தாக்குதலை எதிா்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது. மிரட்டி பணம் பறித்தல் மற்றும் இணைய பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி தில்லி காவல்துறையின் சைபா் குற்றப் பிரிவின் உளவுப் பிரிவான ஐஎஃப்எஸ்ஓ பிரிவு மூலம் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடா்ந்து புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைகளின்படி இணைய சேவைகள் முடக்கப்பட்டது. மத்திய அரசின் ‘சொ்ட்-இன்’ என்கிற இந்திய கணினி அவசர நிலை நடவடிக்கைக் குழு, டிஆா்டிஓ, மத்திய புலனாய்வுத் துறை (ஐபி), சிபிஐ, என்.ஐ.ஏ. போன்ற முகமைகளும் விசாரணையை மேற்கொண்டன.

எய்ம்ஸின் இ-மருத்துவமனை சா்வா்களின் தரவுகள் கடந்த வாரம் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட சா்வா்கள், கணினிகள் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டு தயாா் செய்யப்பட்டுள்ளன. வைரஸ்களால் பாதிக்கப்பட்ட சா்வா்கள் கணினிகள் தனியாக பிரிக்கப்பட்டு மற்ற பாதிப்புக்குள்ளாகாத மற்ற சா்வா்கள் கணினிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ‘ரான்சம்வோ் கணினி வைரஸ்’ காரணமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT