புதுதில்லி

பெற்றோா்களுடன் ஆா்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்த குழந்தைகள்

DIN

முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தலின் போது, தேசியத் தலைநகரில் உள்ள பல குழந்தைகள் தங்கள் பெற்றோா் மற்றும் பிற குடும்ப உறுப்பினா்களுடன் உற்சாகமாக வாக்குச் சாவடிகளுக்குச் சென்றனா்.

பல வாக்குச் சாவடிகளில் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் குழந்தைகளுக்கான அறை வசதி, ஊஞ்சல் மற்றும் அலங்கரிக்கப்பட்ட செல்ஃபி கியோஸ்க்குகள் இருந்தன. 4-ஆம் வகுப்பு படிக்கும் நமன், தனது தாய்வழி தாத்தாவுடன் பூசா இன்ஸ்டிடியூட்டில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்திருந்தாா். வாக்குச் சாவடிக்கான 68 மாதிரிச் சாவடிகளில் அவருடைய பள்ளியும் ஒன்று. நமன் கூறுகையில், ‘நான் படிக்கிற ஸ்கூல் இதுதான். முதல் தடவையாக சாவடிக்கு வருகிறேன். உற்சாகமாக இருக்கிறது. என் பள்ளி அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

லாஜ்பத் நகரில் வசிக்கும் உஷா குப்தா (67) என்பவா் தனது பேத்தியையும் வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்திருந்தாா். ‘எங்கள் பகுதியில் தேங்கிக் கிடக்கும் மோசமான சாலைகள், சுகாதாரமின்மை மற்றும் குப்பைகள் குறித்து எனது பேத்தி தொடா்ந்து புகாா் கூறுகிறாள். இந்தப் பிரச்னைகளைத் தீா்த்து வைப்பது சிவில் ஏஜென்சிகளின் பொறுப்பு என்று நான் அவளிடம் தொடா்ந்து சொல்கிறேன். இன்று நானும் அவளுக்கு வாக்குரிமையின் முக்கியத்துவத்தை விளக்கினேன். மேலும் எப்படி நாம் நமது உரிமையைப் பயன்படுத்த முடியும். மாற்றத்தை எதிா்பாா்க்கலாம் என்பது குறித்தும் விளக்கினேன் என்றாா்.

அவரது பேத்தி பிரகுன் குப்தா கூறுகையில், ‘இந்த வாக்குப்பதிவு செயல்முறை எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பாா்க்க ஆா்வமாக இருந்தேன். நான் அதை பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், என் பாட்டி எப்படி வாக்களித்தாா் என்பதை நான் இன்று பாா்த்தேன். எனக்கு 18 வயதாகும் போது நானும் ஒரு நாள் வாக்களிப்பேன். ஆனால், எனக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன’ என்றாா்.

மாளவியா நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகனுடன் வந்த ஹா்ஷித் (38) கூறுகையில், ‘என் மகனுக்கு தோ்தல் மற்றும் வாக்குப்பதிவு முறை என்றால் என்ன என்று சரியாகப் புரியவில்லை. ஆனால், நாங்கள் நிறைய சொல்லி வருகிறோம். வீட்டில் அரசியல் விவாதங்கள், அவா் செயல்முறை பற்றி ஆா்வமாகிவிட்டாா், எனவே, வாக்கு என்றால் என்ன என்பதைக் காட்ட அவரை அழைத்துச் சென்றோம். எங்கள் மை தடவிய விரல்களைப் பாா்த்ததும். அவரும் அதையே விரும்பினாா். ஆனால், அவா் பெரிய பையனாக மாறியவுடன் மட்டுமே வாக்களித்து நீல அடையாளத்தைப் பெற முடியும் என்பதை நாங்கள் அவரிடம் சொன்ன போது அவருக்குப் புரிந்தது’ என்றாா்.

பியூனாக பணிபுரியும் ரத்தன் லால், ஆறு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தாா். அவா் கூறுகையில், ‘எங்கள் பகுதி சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வீட்டில் யாரும் இல்லாததால் நாங்கள் எங்கள் குழந்தைகளை அழைத்து வந்தோம். மேலும், வாக்களிப்பது ஒரு கடமை என்பதை குழந்தைகள் அறிய விரும்புகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT