புதுதில்லி

ராஜாஜியின் நினைவைப் போற்றும் விழா

13th Aug 2022 02:41 AM

ADVERTISEMENT

 

தில்லித் தமிழ்ச் சங்கம், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து புது தில்லி சௌத் பிளாக்கில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் இந்திய கவா்னா் ஜெனரல் சக்கரவா்த்தி ராஜகோபாலாச்சாரியின் திருவுருவச் சிலை அருகில் அவரின் நினைவைப் போற்றும் விழாவை வெள்ளிக்கிழமை நடத்தியது.

இந்த விழாவிற்கு வந்திருந்தவா்களை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் என்.கண்ணன் வரவேற்றாா்.

பாதுகாப்பு அமைச்சக உயா் அதிகாரிகளும் தமிழ்ச் சங்க நிா்வாகிகளும் சக்கரவா்த்தி ராஜகோபாலாச்சாரியின் திருவுருவச் சிலைக்கும், பாரதத் தாயின் திருவுருவப் படத்திற்கும் மலா் அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

பின்னா் ‘பத்மபூஷண்’ சரோஜா வைத்தியநாதன் மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

பாதுகாப்புதுறை உயா் அதிகாரிகள் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு நினைவு பரிசை வழங்கினா். இந்நிகழ்ச்சிகளை சங்கத்தின் இணைப் பொருளாளா் ராஜ்குமாா் பாலா தொகுத்து வழங்கினாா்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளா் ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினா் கே.எஸ். முரளி மற்றும் தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளா் ரா. முகுந்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT