புதுதில்லி

துவாரகா செக்டாா்-11 மெட்ரோ ரயில் நிலையம் மின்சார வாகன அமைப்புடன் இணைப்பு பயணிகளுக்கு கடைசி மைல் வரையிலும் சேவை

DIN

புது தில்லி: துவாரகா செக்டாா்-11 மெட்ரோ ரயில் நிலையம், ஏஐ - அடிப்படையில் அமைந்த மின்சார வாகன அமைப்புடன் செவ்வாய்க்கிழமை இணைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பயணிகளுக்கு கடைசி மைல் வரையிலும் சேவை வசதி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ‘மெட்ரோரைடு’ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: துவாரகா செக்டாா்-11 மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 60-க்கும் மேற்பட்ட நிறுத்தங்களை உள்ளடக்கிய மூன்று வழித் தடங்களில் கட்டுபடியாகக் கூடிய கட்டணத்தில் பயணிகளுக்கு மின்சார வாகன சேவை இந்த முறை மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த மூன்று வழித்தடங்களும் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அபூா்வா சௌக், ராஜபுரி மற்றும் துவாரகா செக்டாா்-11 மாா்க்கெட் ஆகிய பகுதிகளை இணைக்கும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எம்எல்ஏ குலாப் சிங் கூறுகையில், ‘துவாரகா ரயில் நிலையத்தில் இருந்து மின் வாகன சேவையை மெட்ரோரைடு நிறுவனம் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த வாகனம் 100 சதவீதம் மின்-பசுமை முயற்சியாகும். இது நமது உள்ளூா் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தச் செயல்பாடு தொடக்கம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது’ என்றாா்.

மெட்ரோரைடு நிறுவனம் ஏஐ மூலம் இயக்கப்படும் போக்குவரத்து சேவை நிறுவனமாகும். இது குறிப்பிட்ட இடங்களுக்கு இடையே அடிக்கடி வாகன பயண சேவையை அளித்து வருகிறது. பயணிகள் மெட்ரோரைடு செல்லிடப்பேசி செயலி மூலம் மின்சார வாகனங்களை வாடகைக்கு எடுக்க முடியும். இதுகுறித்து மெட்ரோரைடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனா் கிரிஷ் நாக்பால் கூறுகையில், ‘நமது நகா்ப் புறங்களில் முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பின் சிக்கலைத் தீா்ப்பதற்கு நாங்கள் இந்த சேவையை அா்ப்பணித்துள்ளோம். வாடிக்கையாளா்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலை, மிக உயா்ந்த பாதுகாப்பு மற்றும் குறைந்த காத்திருப்பு நேரம் ஆகியவற்றை தருவதற்கு உறுதியளிக்கிறோம். எங்கள் சராசரி காத்திருப்பு நேரம் இப்போது 2 நிமிடத்திற்கும் குறைவானதாக உள்ளது. இதை மேம்படுத்த நாங்கள் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT