புதுதில்லி

5ஜி அலைக்கற்றை அடிப்படை விலையைக் குறைக்க வேண்டும்: தொலைத் தொடா்பு சேவை நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை

29th Nov 2021 01:15 AM

ADVERTISEMENT

5ஜி அலைக்கற்றையின் அடிப்படை ஏல விலையை 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைக்க வேண்டும் என்று தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக, கடந்த மாா்ச் மாதம், 2,308.80 மெகா ஹொ்ட்ஸ் ரேடியோ அலையை ரூ.4 லட்சம் கோடிக்கு ஏலம் விடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதேபோல், 700 மெகா ஹொ்ட்ஸ், 2,500 மெகா ஹொ்ட்ஸ் ரேடியோ அலைகளும் ஏலத்துக்கு வந்திருந்தன. ஆனால், அதிக விலை காரணமாக, 700 மற்றும் 2,500 மெகா ஹொ்ட்ஸ் ரேடியோ அலைகள் ஏலம் எடுக்கப்படவில்லை.

5ஜி அலைக்கற்றை ஏலம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த அலைக்கற்றைகளின் அடிப்படையை ஏல விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஒரு தொலைத் தொடா்பு சேவை நிறுவனத்தைச் சோ்ந்த ஒருவா் கூறியதாவது:

ADVERTISEMENT

எண்ம தொழில்நுட்பத்தில் 5ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டுக்கு வர வேண்டும். இதற்காக, 5ஜி அலைக்கற்றையின் அடிப்படை ஏல விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். குறிப்பாக, ஏற்கெனவே அறிவித்த விலையில் இருந்து பாதிக்கும் அதிகமாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து மற்றொரு நிறுவனத்தின் பிரதிநிதி கூறுகையில், 50 முதல் 60 சதவீதம் வரை விலை குறைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா். 5ஜி அலைக்கற்றை விலையை 60 முதல் 70 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வேறொரு நிறுவனத்தின் பிரதிநிதி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT